
Cinema News
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி… மணிரத்னம் ஆசையை நிறைவேற்ற களமிறங்கியது அவரின் மகனா?
Published on
By
தமிழ் சினிமாவில் பலதலைமுறையாக ஆசைப்பட்ட ஒரு கதை என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கல்கியின் முக்கிய புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வனை அப்போதைய எம்ஜிஆரில் இருந்து இப்போதைய விஜய் அனைவருமே நடிக்க ஆசைப்பட்டனர்.
ஒரு இயக்குனர் கூட அதற்கு தைரியமாக முன்வரவில்லை. ஆனால் நான் இருக்கேன் என்ற ரீதியில் மணிரத்னம் களமிறங்கினார். இதற்கான அறிவிப்பு வெளியானது போது இதெல்லாம் நடக்கிற கதையா என பலரும் நக்கல் செய்தனர். ஆனால் அவர்கள் எண்ணத்தினை பொய்யாக்கும் படி படத்தினை இரண்டு பாகமாக எடுத்து வெளியிட்டார்.
இதையும் படிங்க : இனி என்னால் நடிக்க முடியாது… இயக்குனரின் காலில் விழுந்த லைலா… என்ன நடந்தது?
நாயர்கள் தேர்வில் கூட அவரிடம் மிகப்பெரிய எச்சரிக்கை இருந்தது. அதற்கேற்ப தனக்கான நாயகி, நடிகர்களை தேடி பிடித்தார். ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், லால், பிரபு என அத்தனை பிரபல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் முதல் பாகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
பல பிரபல படங்கள் எல்லாமே முதல் பாகத்தினை முடித்து விட்டே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகே செல்வார்கள். இதனால் சில பிரபலங்கள் தோற்றமே மாறுப்பட்டு இருக்கும். இதை சரியாக கணித்த மணிரத்னம் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை முடித்து சில மாத இடைவேளையில் இரண்டாம்பாகத்தினை ரிலீஸ் செய்தார்.
இதையும் படிங்க : ரஜினிக்கு காரை பரிசாக வழங்கிய சன்பிக்சர்ஸ்! எப்பா அல்ட்ரா டீலக்ஸ் காரா இருக்கும் போலயே! நெல்சா என்ன இது?
படம் ரிலீசாகி புக் அளவு இல்லை என சிலர் சொன்னால் கூட புதினத்தினை படமாக்கும் போது இதெல்லாம் நடக்கும் தான் என பாசிட்டிவ் விமர்சனங்களே வந்து விழுந்தது. அந்த வகையில் படத்தின் வசூல் மிகப்பெரிய வகையில் அமைந்தது. ஆனால் இந்த விஷயம் நடக்க தந்தையின் ஆசையை நிறைவேற்றியது மணிரத்னத்தின் மகன் நந்தன் தானாம்.
லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு பணத்தினை லண்டனில் இருக்கும் இன்னொரு தொழிலதிபரிடம் பேசி ஏற்பாடு செய்தவரும் அவர் தானாம். என்ன தான் லாபம் வரும் என்றாலும் தந்தையின் ஆசைக்காக மகன் எடுத்தது ரிஸ்க் தான் என்கின்றது கோலிவுட் வட்டாரம்.
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிகர் ரஜினிகாந்தும் நடிக்கப் போவதாகவும் அஜர்பைஜானில் அவர்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க என நெட்டிசன்கள் கிளப்பியுள்ள ஏஐ...
Rajini: தமிழ் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சியை ஒரு இமாலய வளர்ச்சியாகவே பார்க்கமுடிகின்றது. 70 வயதை கடந்தாலும் இன்னும் ரஜினிக்கு உண்டான அந்த...
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா...
AR Rahman: மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த ஆர்.கே.சேகர் என்பவரின் மகன்தான் ரஹ்மான். இவருக்கு அப்பா வைத்த பெயர் திலீப். அப்பா...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அக்டோபர் 5ம் தேதி...