உனக்கென்ன ரஜினி – விஜயகாந்துன்னு நினைப்பா?!. மோகனின் ஆசைக்கு ஆப்பு வைத்த இயக்குனர்..

Published on: December 22, 2023
---Advertisement---

Actor Rajini: ரஜினியின் ஸ்டைல் , நடிப்பைப் பின்பற்றி இன்று பல நடிகர்கள் சினிமாவிற்குள் வந்த வண்ணம் இருக்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் ரஜினியை கடவுளாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதை ரஜினியின் பிறந்த நாளின் போது அவர் வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களிடம் பார்க்க முடிந்தது.

தலைவா தயவு செய்து ஒரு  முறை வந்து எங்களை பார். இல்லாவிடில் இங்கேயே செத்து விடுவோம் என கூக்குரலிட்ட படி இருந்ததை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கு ரஜினியை தன் வாழ்க்கையின் அங்கமாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையும் படிங்க: எங்க செல்லம் பாதி டிரெஸ்ஸ காணோம்!.. தூக்கலா காட்டி தூங்கவிடாம பண்னும் ரேஷ்மா..

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ஆர்.சுந்தராஜன் கூறிய ஒரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. சத்யராஜ், மோகன், விஜயகாந்த், ரஜினி என பல முன்னணி நாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஆர்.சுந்தராஜன்.

இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த நடிகராகவும் ஜொலித்திருக்கிறார். மோகனை வைத்து மெல்ல திறந்தது கதவு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆர்.சுந்தராஜிடம் மோகன் ‘ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் இவர்களுக்கெல்லாம் சண்டை காட்சிகள் வைக்கிறீர்கள். எனக்கு மட்டும் இல்லை. இந்தப் படத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும்’ என கேட்டாராம்.

இதையும் படிங்க: அந்த தலைப்பே வேணாம்!. ஹெச்.வினோத்துக்கு கட்டையை போட்ட கமல்.. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிங்கப்பா!…

அதற்கு ஆர். சுந்தராஜன் ‘எப்படியும் இந்தப் படம் முடியிறதுக்குள்ள உனக்கும் எனக்கும் சண்டை வரத்தான் போகுது. அப்புறம் எதுக்கு சண்டைக் காட்சி’ என கேட்டாராம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார் ஆர்.சுந்தராஜன்.

ரஜினி சும்மா திரும்பி பார்த்தாலே பத்து பேரு விழுவான். அதை சிவக்குமாரிடம் பார்க்க முடியாது. ஆனால் ரஜினிக்கு அப்புறம் விஜயகாந்திடம் பார்க்கலாம். அதனால்தான் விஜயகாந்துக்கு சண்டைக் காட்சிகளை வைத்திருப்பேன். அதனால் சில பேருக்கு என்ன வைக்கலாம்? வைக்கக் கூடாது என தெரிந்துதான் கதையும் இருக்கும் என ஆர். சுந்தராஜன் கூறினார்.

இதையும் படிங்க: 3 மடங்கு அதிக சம்பளம்!.. தனுஷ் பட இயக்குனரை தட்டி தூக்கிய லெஜண்ட் சரவணா…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.