Connect with us
vinoth

Cinema News

அந்த தலைப்பே வேணாம்!. ஹெச்.வினோத்துக்கு கட்டையை போட்ட கமல்.. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிங்கப்பா!…

Kamalhaasan: விக்ரம் திரைப்படத்திற்கு பின் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பயங்கர பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன். ஏனெனில், விக்ரம் படத்தின் மெகா ஹிட் மொத்த திரையுலகத்தையும் கமல் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. அதாள பாதாளத்தில் இருந்த கமலின் மார்கெட் ஜெட் வேகத்தில் மேலே போய்விட்டது.

30 கோடிக்கு இந்தியன் 2-வில் நடிக்க ஒப்புக்கொண்ட கமல்ஹாசன் இப்போது தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக அதிரடியாக உயர்த்திவிட்டார். அதோடு, பல படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். இந்தியன் 2-வாக உருவான படம் அடுத்து இந்தியன் 3-யாகவும் மாறிவிட்டது.

இதையும் படிங்க: ரசிகர்களை மொத்தமா ஏமாற்றிய கமல் – மணிரத்னம்!. நல்லா சிறப்பா செஞ்சிட்டாங்கப்பா?..

மேலும், மணிரத்னத்துடன் இணைந்து ‘தக் லைப்’ என்கிற படத்தையும் அறிவித்தார். மேலும், தலைப்பை அறிவிக்கும்போது ஒரு ஸ்பெஷல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இது ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என உருவாகும் ‘கல்கி’ என்கிற படத்திலும் 20 நாட்கள் நடிக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.150 கோடி. இந்த படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளது. அதேபோல், ஹெச்.வினோத்தின் இயக்கத்திலும் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: 3 மடங்கு அதிக சம்பளம்!.. தனுஷ் பட இயக்குனரை தட்டி தூக்கிய லெஜண்ட் சரவணா…

இந்த படத்தின் படப்பிடிப்பும், மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பும் ஒன்றாகவே நடிக்கவுள்ளது. துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஹெச்.வினோத் இன்னும் அடுத்த படத்த இயக்கவில்லை. கமல் படம் தள்ளிக்கொண்டே போனதால் இடையில் ஒரு படத்தை இயக்கவும் வினோத் நினைத்தார். ஆனால், கமல் அவரை தடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

H Vinoth

H Vinoth

மேலும், அவர்கள் இருவரும் இணையும் படத்திற்கு ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற தலைப்பை கமல் சொல்ல வினோத்தும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், இது எப்போதோ கமல் அறிவித்த தலைப்பு. சில வருடங்களுக்கு முன்பு இதே தலைப்பில் கமல் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளும் நடந்தது. ஆனால், அதன்பின் அது டிராப் ஆகிவிட்டது.

எனவே, ‘அந்த தலைப்பு இப்போது வைத்தால் பழைய படம் என்பது போல் ஒரு உணர்வு வரும். எனவே, நீங்களே ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுங்கள்’ என ஹெச்.வினோத்திடம் கமல் சொல்லிவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் துவங்கவுள்ளது.

இதையும் படிங்க: பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்! ஒன்னு இல்ல – டபுள் ட்ரீட் கொடுக்க களத்தில் இறங்கும் ஆண்டவர்

google news
Continue Reading

More in Cinema News

To Top