Connect with us
thug life

Cinema News

ரசிகர்களை மொத்தமா ஏமாற்றிய கமல் – மணிரத்னம்!. நல்லா சிறப்பா செஞ்சிட்டாங்கப்பா?..

Thug life: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் மேலே உயர்த்தி சென்று உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர். அதனால்தான் இந்தியாவின் முக்கிய இயக்குனராகவும் பார்க்கப்படுகிறார். கமலை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் நாயகன்.

தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் இப்படம் எப்போதும் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு நடிப்பு, கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கும். கமலின் திரைவாழ்விலும் நாயகன் படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமான மணிரத்னமும், கமலும் அதன்பின் இணையவே இல்லை.

இதையும் படிங்க: தளபதி68 இந்த படத்தின் காப்பியா.. இது விஜயிற்கே முதல்முறை தானாம்… ஆச்சரிய தகவல்..

விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிலையில் கமலின் மார்க்கெட் மேலோ போயுள்ளதால் இப்போது இருவரும் இணையும் சூழ்நிலை வந்துள்ளது. இப்படத்திற்கு தக் லைப் என தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தலைப்பை அறிவிக்கும்போது கூடவே ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.

thug life

அதைப்பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் ஒரு பீரியட் படமாகவே இருக்கும் என எல்லோராலும் நினைக்கப்பட்டது. அதோடு, தக் லைப் என்றால் என்ன எனவும் பலரும் ஆராய்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். ஆனால், இது ஒரு பீரியட் படமே இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ரவீனாவின் அம்மா வராததற்கு காரணம் இதுதானா? உள்ளே வந்த ஆண்டி – டோட்டல் டேமேஜ் ஆன மணி

சமகாலத்தில் நடக்கும் ஒரு பக்கா ஆக்‌ஷன் கதையைத்தான் கமலும், மணிரத்தினமும் இணைந்து எடுக்கவுள்ளனராம். ஆனால், அது ரசிகர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மிஸ் லீட் செய்யும் வகையில்தான் அந்த வீடியோவை உருவாக்கியுள்ளனராம். உண்மையில், அந்த வீடியோவில் காட்டப்படும் காட்சிக்கும் ‘தக் லைப்’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லப்படுகிறது.

இப்படி ரசிகர்களை மிஸ் லீட் செய்வதை துவங்கி வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். விக்ரம் படம் உருவான போது கமல் தன் முன் பல வகையான உணவு ஐட்டங்களை வைத்துக்கொண்டு ‘ஆரம்பிக்கலாங்களா’ என வசனம் பேசுவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆனால், அதற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸ்காரை தட்டி தூக்குவது உறுதி! அத எப்படிபா லைவ்ல எடுத்தாங்க? ஆச்சரியப்படுத்திய ‘தங்கலான்’

google news
Continue Reading

More in Cinema News

To Top