Connect with us
vikram

Cinema News

ஆஸ்காரை தட்டி தூக்குவது உறுதி! அத எப்படிபா லைவ்ல எடுத்தாங்க? ஆச்சரியப்படுத்திய ‘தங்கலான்’

Thangalaan Movie: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கையோடு ஆரம்பிக்கப்பட்ட படம்தான் தங்கலான். விக்ரமுக்கு ஒரு கட்டாய ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் இந்தப் படம் இப்போது இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மல்டி ஸ்டாரர் படமாக வெளியானது. அதற்குமுன்பு வரை வெளியான ஒரு சில படங்கள்  விக்ரமுக்கு எந்த வெற்றியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இந்த தங்கலான் திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…

அதுவும் பா.ரஞ்சித் படம் என்பதால் அவர் சொல்லவரும் அரசியல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். அதற்கேற்ற வகையில் விக்ரமும் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மேலும் இந்தப் படம் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஒரு பகுதியில் நடந்ததாம். பிரிட்டிஷுக்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் நிகழ்வு என்பதால் அதற்கேற்ற வகையில் இருக்கும் ஊர் பகுதிகளை தேடி அலைந்திருக்கிறார் ரஞ்சித். எந்தவொரு தொலை தொடர்பும் இருக்காதாம்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் கார்த்திக்குக்கு அடிமை!.. அட இதை சொன்னது யார் தெரியுமா?…

இடையே ஆறு, மலை, பள்ளம் என இவற்றையெல்லாம் கடந்து நடந்துதான் செல்ல வேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை ஆஸ்கார் வரை கொண்டுசெல்லவும் முடிவு செய்தே படத்தை படமாக்கியிருக்கிறார்கள்.

அதற்காக எல்லாருமே லைவ்வாகவே வசனம் பேசி   நடித்திருக்கிறார்களாம். அதுமட்டுமில்லாமல் பேக் ரவுண்ட் இசையும் லைவ்வாகவே தான் நடந்ததாம். ஒவ்வொரு சீனுக்கும் தேவையான இசையை நேரடியாகவே இசையமைத்துதான் படமாக்கியிருக்கிறார்களாம். அதற்காக பழங்கால இசைக் கலைஞர்களை நேரடியாகவே வரவழைத்து இசையமைக்க சொல்லி படமாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: 8 வயதிலேயே நடன இயக்குனர்.. அப்பவே சினிமாவில் நடித்த ஜெயலலிதா!. வெளிவராத தகவல்

வரும் ஜனவரி 26 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் தங்கலான் திரைப்படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top