Connect with us
jayalalitha

Cinema News

8 வயதிலேயே நடன இயக்குனர்.. அப்பவே சினிமாவில் நடித்த ஜெயலலிதா!. வெளிவராத தகவல்

தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் ஸ்ரீதர் இவரை ஒரு நீச்சல் குளத்தில் பார்த்துவிட்டு அவரின் அம்மாவிடம் பேசி நடிக்க வைத்தார். அப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் ஜெயலலிதா.

அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வரும் என ஜெயலலிதா நினைத்திருக்கவே மாட்டார். 1965ம் வருடம் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் டூயட் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தின் மெகா வெற்றி ஜெயலலிதாவை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. நடிக்காம இருந்தாலும் நடிகர் திலகம்தான்…

எனவே, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் சிவாஜி, ஜெய்சங்கர் முத்துராமன் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி நாட்டின் முதல்வராகவும் மாறினார். ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் வெண்ணிற ஆடை என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அனால், அந்த படத்திற்கு முன்பு ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ஒருமுறை அவரின் அம்மா சந்தியாவுடன் ‘ஸ்ரீ சைல மஹாத்மே’ ஒரு கன்னட படத்தின் படப்பிடிப்பை காண போனார். அப்போது அவருக்கு வயது 8.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா! அப்படி என்னத்தான் இவங்களுக்கு பிரச்னை தெரியுமா..?

அந்த படத்தில் கிருஷ்ணகுமாரி கதாநாயகியாக நடித்தார். அவருடன் நடித்த ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, ஜெயலலிதாவை பார்த்ததும் ‘நீ நடிக்கிறாயா?’ என இயக்குனர் கேட்க ஜெயலலிதாவும் தலையாட்டினார். அவரின் அம்மாவும் சம்மதம் சொல்ல ஜெயலலிதா நடிக்க தயார் ஆனார்.

jayalalitha

இதுபற்றி ஒருமுறை சொன்ன ஜெயலலிதா ‘படப்பிடிப்பு துவங்கியதும் எங்கிருந்தோ ஒரு ஹார்மோனியம் இசைக்கும் சப்தம் எனக்கு கேட்டது. உடனே நான் ஆட துவங்கினேன். எனக்கு ஏற்கனவே நடனம் தெரியும் என்பதால் என் இஷ்டத்திற்கு என்னை ஆட விட்டுவிட்டார்கள். நான் ஆடியதை படம்பிடித்துவிட்டு பின்னர் அதற்கு ஏற்ப பாடலை உருவாக்கி படத்தில் சேர்த்தார்கள். அப்படி பார்த்தால் நான்தான் அந்த பாடலின் நடன இயக்குனரும் கூட’ என சொல்லி சிரித்தார் ஜெயலலிதா. இதுதான் ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அந்த நீலாம்பரியே அவர்தான்!.. படையப்பா பார்த்துவிட்டு ஜெயலலிதா சொன்னது இதுதான்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top