Connect with us

Cinema History

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா! அப்படி என்னத்தான் இவங்களுக்கு பிரச்னை தெரியுமா..?

Rajinikanth: பொதுவாக ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் பிரச்னை இருந்ததாக ஒரு தகவல் எப்போதுமே கோலிவுட் வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால் அதில் உண்மை இருக்கா என்பதை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் தான் ஜெயலலிதா சினிமாவில் இருந்து விலகினார். அப்போது அவர் முழு நேர அரசியல்வாதியாகவும் மாறி இருந்தார். ரஜினிக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். ஆனால் நடிகை லதா பிரச்னையால் எம்.ஜி.ஆருக்கு ரஜினி மீது தனிப்பட்ட பிரியம் என எதுவும் இல்லை.

இதையும் படிங்க: இப்படியே போனா எங்க கதி!.. புடவையில் கட்டழகை காட்டி சூடேத்தும் யாஷிகா ஆனந்த்…

இது ஒரு புறமிருக்க ஜெயலலிதாவுக்கு ரஜினி மீது அப்படி எந்த கோபமும் இல்லை. ஆனால் அவரின் ஆட்சி எப்போதுமே கண்டிப்புடன் இருக்கும். இதை விரும்பாதவர் ரஜினிகாந்த். குடிப்பழக்கம் அவருக்கு இருந்ததால் ஆரம்ப காலத்தில் சோழா ஹோட்டலில் குடித்துவிட்டு நடந்து வீட்டுக்கு செல்வாராம்.

அப்போது ஜெயலலிதாவின் வீட்டு காவலர்கள் முதல்வர் வீடு இருக்கு நீங்க இந்த நிலைமையில் போறது சரியில்லை என தொடர்ந்து சொல்லி  வந்தனர். ஆனால் ரஜினியோ நான் என் வேலையை பார்த்துட்டு தானே போறேன். இதில் என்ன தப்பு? என் வீடும் இந்த பக்கம் என்ற அடிப்படையில் இந்த பிரச்னையை ஜெயலலிதாவிடமே எடுத்து சென்று விட்டாராம்.

இதையும் படிங்க: சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…

ஜெயலலிதா கோபப்படாமல் தன்னுடைய காவலர்களிடம் ரஜினியை தொந்தரவு செய்ய கூடாது என கண்டித்து இருக்கிறார். அதுப்போல ரஜினிகாந்த் கருணாநிதி மற்றும் மூப்பனாருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஜெயலலிதா ஆட்சி இழந்தார். இதைக்கூட அவர் மனதில் வைத்து கொள்ளவில்லையாம்.

ரஜினி தன்னுடைய மகள் திருமணத்துக்கு அழைத்த போது சந்தோஷமாக வந்து தம்பதிகளை வாழ்த்தினார். ரஜினிகாந்த் கொள்கை ரீதியாக மாறுப்பட்டாலும் ஜெயலலிதாவையோ, எம்.ஜி.ஆரையோ அவர் விமர்சித்ததே இல்லை. ஆனால் ஜெயலலிதா ரஜினியின் மீது கோபமே படாதவர். ஏனெனில் அவர் அரசியலில் இல்லை. அதனால் அவரை தன் போட்டியாக கூட கருதவில்லை.

இதையும் படிங்க: எனக்கு பேரு வச்சவங்க இத செய்யாமலா இருப்பீங்க! மாயாவை பொழந்து கட்டிய கமல் – என்ன பேரு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top