Connect with us
kamal

Biggboss Tamil 7

எனக்கு பேரு வச்சவங்க இத செய்யாமலா இருப்பீங்க! மாயாவை பொழந்து கட்டிய கமல் – என்ன பேரு தெரியுமா?

Actor Kamal: ரசிகர்களின் அன்பான வேண்டுகோளாக கமலிடம் இருந்தது தயவு செய்து பிக்பாஸை ஹோஸ்ட் செய்வதை நிறுத்திவிடுங்கள் என்பதுதான். அந்தளவுக்கு இந்த சீசனில் கமலை வச்சு செய்து விட்டனர் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் நெட்டிசன்களும்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் இருந்த சீசன் வரை கமல் மீது போட்டியாளர்கள் மத்தியில் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் கமலை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்று நாள்தோறும் தெரிகிறது.

இதையும் படிங்க: இப்படியே போனா எங்க கதி!.. புடவையில் கட்டழகை காட்டி சூடேத்தும் யாஷிகா ஆனந்த்…

சனிக்கிழைமை வந்து திட்டினால் ஒரு சாரி சொன்னால் போதும். அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு போய்விடலாம் என்று மாயாவும் பூர்ணிமாவும் சொன்னதில் இருந்தே கமலுக்கு அவர்கள் சாரி சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்த்தில் இல்லை என்பது நேற்று நடந்த எபிசோடில் தெரிந்தது.

நேற்று பூர்ணிமாவை ஒரு பிடி பிடித்து விட்டார் கமல். பேச முடியாமல் தவித்த பூர்ணிமா சாரி சொன்ன போது அதற்கு கமல் ‘ஐய்யோ அந்த சாரிக்குண்டான மதிப்பே இந்த வீட்டில் குறைந்து விட்டது. அதுவும் இந்த சீசனில் அதை கெடுத்துவிட்டீர்கள்’ என்பது போல் கூறினார்.

இதையும் படிங்க: சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…

இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நாமினேஷன் பற்றி வெளியில் கலந்துரையாடக் கூடாது என பிக்பாஸ் அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் அதை மீறி மாயா நேரிடையாக பெயரை குறிப்பிடாமல் ஒரு சில கரப்பான் பூச்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதைப் பற்றி இன்று கமல் மாயாவிடம் கேட்கிறார். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தருக்கும் பேர் வச்சிருக்கீங்களா? என்று கேட்கிறார். அப்படி பண்ணக் கூடாது என்று தெரியுமல்லவா மாயா? என்று கேட்கிறார். அதற்கு அப்படி வைக்கல சார் என சொல்ல,

இதையும் படிங்க: கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…

அதற்கு கமல் ‘அப்போ அதுவா வந்திருச்சா? எனக்கும் வந்திருச்சு. கமல்ஹாசன் என்ற பெயரை அப்படி கூப்பிடுராங்க. கண் முழிச்சு பார்த்தா எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க’ என்று கூறினார். இந்த சீசனில் கமலை குடிகார மாமா என்று பூர்ணிமா வீட்டிற்குள் பேசும் போது கூறியிருப்பார். அது மிகவும் வைரலானது. அதை சொல்லாத விதமாக குத்திக் காட்டியிருக்கிறார் கமல்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top