அந்த நீலாம்பரியே அவர்தான்!.. படையப்பா பார்த்துவிட்டு ஜெயலலிதா சொன்னது இதுதான்!..

சில இயக்குனர்கள் சில கதாபாத்திரங்களுக்கு நிஜ வாழ்வில் ஒரு பிரபலமான ஒருவரை முன் மாதிரியாக எடுத்து கொள்வார்கள். அவர்களை மனதில் வைத்தே அந்த கதாபாத்திரத்திற்கான காட்சிகளையும், வசனங்களையும் எழுதுவார்கள். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் அது புரியாது.

சிலர் மட்டுமே அதை சரியாக புரிந்துகொள்வார்கள். சில சமயம் மக்களிடம் பிரபலமான ஒருவரை கிண்டலடிப்பது போலவும் காட்சிகளை வைப்பார்கள். 80,90களில் இது அதிகம் நடந்தது. தமிழக அரசியலையும், அரசியல்வாதிகளையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடித்து காட்சிகளையும், வசனங்களையும் வைத்தார்கள்.

இதையும் படிங்க: வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..

அதுவும் விஜயகாந்த் படமென்றால் சொல்லவே தேவையில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன், ஏழை ஜாதி ஆகிய படங்களில் அரசியல் வசனங்கள் அனல் பறக்கும். இயக்குனர்கள் தைரியமாக ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தனர். மணிவண்ணன் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த அமைதிப்படை படம் அதற்கு பெரிய உதாரணம். ஆனால், 2 ஆயிரத்திற்கு பின் இது மாறியது.

இப்போதெல்லாம், தங்களை தாக்குவது போல ஒரு சின்ன வசனம் வந்தாலே அரசியல் தொண்டர்கள் படம் ஓடும் தியேட்டர்களில் சென்று ரகளை செய்வதோடு, படத்தை ஓடவிடாமல் தடுக்கிறார்கள். நடிகர் விஜய் கூட இதை சந்தித்திருக்கிறார். கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை 2 நாட்கள் வெளியிட விடாமல் தடுத்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினியின் கோபத்தால் சினிமாவில் நடிக்கவந்த விஜயகாந்த்!. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!..

ரஜினிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டபோது தனது படங்களில் அவரை எதிர்ப்பது போலவும், அவரை விமர்சனம் செய்வது போலவும் வசனங்களை வைத்தார் ரஜினி. பாண்டியன், முத்து, மன்னன், அண்ணாமலை என பல படங்களிலும் அப்படி காட்சிகளும், வசனங்களும் வரும்.

உச்சகட்டமாக படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இதை கே.எஸ்.ரவிக்குமாரும் உறுதி செய்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரவிக்குமார் ‘படையப்பா படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது ஜெயலலிதா அப்படத்தை பார்த்தார். என்ன ஆகுமோ எனக்கு பயமாகவே இருந்தது. ஆனால், நீலாம்பரி கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. படம் எனக்கு பிடித்திருக்கிறது என அவர் சொன்னதாக எனக்கு செய்தி கிடைத்தது’ என ரவிக்குமார் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி சொன்னாருங்கிறதுக்காக நடிக்க முடியாது! நல்லதுக்கு காலம் இல்லப்பா – வாய்ப்பு கொடுத்தது தப்பா?

 

Related Articles

Next Story