லோகேஷையே ஆட்டம் காண வச்சவரு! வெங்கட் பிரபுவை விட்டு வைப்பாரா? மோகனால் கதிகலங்கிய ‘கோட்’

by Rohini |
mohan
X

mohan

Actor Moohan: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் மோகன். இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக இருந்தவர். இந்த காலத்தில் விஜய்க்கு இருக்கும் கிரேஸ் அப்போதைய காலகட்டத்தில் மோகனுக்கு இருந்தது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பாலும் அழகான சிரிப்பாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் மோகன்.

அவருடைய நடிப்பு ஒரு பக்கம் அடையாளமாக இருந்தாலும் அவரை இந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அவருடைய வாய்ஸ். அவர் நடித்த எல்லா படங்களுக்குமே டப்பிங் கொடுத்தவர் விஜயின் தாய் மாமாவும் பாடகருமான எஸ் என் சுரேந்தர். அவர்தான் மோகனின் எல்லா படங்களுக்கும் டப்பிங் பேசியவர். அதுவும் மோகனின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படிங்க: அஞ்சலியா இருக்கப்போய் தான் முடிஞ்சிது… இதுவே அந்த ஹீரோயினா இருந்தா? செஞ்சிருப்பாங்க… விளாசும் பிரபலம்!..

இந்த நிலையில் மோகன் கோட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது வந்த தகவலின் படி இந்த கோட் படத்தில் மோகன் ஒரு கண்டிஷன் வைத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருப்பார். முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் எப்படியாவது மோகனை நடிக்க வைக்க வேண்டும் என லோகேஷ் முயற்சித்து இருக்கிறார்.

ஆனால் அர்ஜுனின் கதாபாத்திரம் மோகனுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் வேண்டாம் என கூறிவிட்டாராம். லியோவில் அர்ஜுனின் கதாபாத்திரமே திருப்தி அளிக்கவில்லை என்றால் கோட் படத்தில் அதைவிட ஒரு முக்கியமான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படித்தான் ஒரு கண்டிஷனைப் போட்டு இந்த கோட் படத்திற்குள் வந்திருக்கிறாராம் மோகன்.

இதையும் படிங்க: ஏங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..

இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் படத்தில் சீன் பை சீன் தன்னுடைய கேரக்டர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது? என்றெல்லாம் முழுவதுமாக கேட்டுவிட்டு தான் இந்தப் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் மோகன்.

ஏனெனில் 80களில் தமிழ் சினிமாவையே கலக்கிய ஒரு அழகான நடிகர். விஜய் படம் என்றால் உடனே ஓகே என வந்து விடுவாரா என்ன? தனக்கென இந்த படத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை முழுவதும் அறிந்து கொண்டு தான் படத்திற்குள் வந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த படத்தைப் பற்றிய ஒரு சிறிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வருவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு வருகின்றது.

இதையும் படிங்க: லட்சத்துக்கே நடிப்பை கொட்டுவாரு… இதுல கோடியா? கருடன் படத்தில் வைரலாகும் சூரியின் சம்பளம்…

மேலும் எஸ்.என். சுரேந்தருக்கும் மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்தே மோகனுக்கு டப்பிங் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். அப்படி இருக்கையில் கோட் படத்தில் மோகனுக்காக யார் டப்பிங் கொடுத்தார்கள்? அல்லது அவரது சொந்தக் குரலிலேயேதான் பேசினாரா என்று படம் வெளியாகும் போதுதான் தெரியும்.

Next Story