கடைசிவரை மோகன் இதை செய்யவில்லை!.. சிவாஜியை பின்பற்றி ஸ்கோர் செய்த மோகன்!..
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் தமிழ் சினிமாவில் உச்சம் தொட துவங்கிய காலத்தில் அவர்களின் படங்களுக்கு நேரடி சவால் விடும் விதமாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது பெயர் அந்த காலகட்டத்தில் உச்சம் பெற இவருக்கு பேருதவியாய் அமைந்தது இவரது படங்களில் வந்த பாடல்கள்.
கதைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட இவர் படங்களில் வரும் பாடல்களுக்கே முன்னுரிமை அப்பொழுது. பாடல்களால் வெற்றியடைந்த படங்களில் நடித்த கதாநாயகர்கள் வரிசையில் மோகனுக்கு முன்னுரிமை கிடைத்தது. பல வெள்ளி விழா கண்ட படங்களை கொடுத்த நடிகர் என்ற சாதனை பின்னணியும் இவர் வசம் இன்றும் உள்ளது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு சில்க் கொடுத்த மரியாதை… இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கே… இப்படி எல்லாமா நடந்தது?
தயாரிப்பாளர்கள் இவரை அதிகம் தேட காரணமானது இவர் படங்கள் பெற்ற வெற்றி மட்டும் அல்ல. சம்பள விஷயங்களில் இவர் காட்டாத காரரும் கூடதானாம். தொடர் வெற்றியை வசியப்படுத்தி கொண்டாலும் இவர் அடிக்கடி தனது சம்பளத்தை உயர்த்தியது கிடையாதாம்.
பொதுவாக ஒரு படம் ஹிட் அடித்தாலே அப்படத்தின் ஹீரோ சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிடுவார். தொடர்ந்து 3 படங்கள் வெற்றி என்றால் அந்த ஹீரோவை கையில் பிடிக்க முடியாது. ஆனால், தொடர் ஹிட் மற்றும் வெள்ளிவிழா படங்களை கொடுத்த மைக் மோகன் சம்பளத்தை ஏற்றாமல் இருந்தது பெரிய ஆச்சர்யம். இது அவரை வைத்து படமெடுக்க நினைத்த தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருந்தது.
இதையும் படிங்க: இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. புலம்பிய ஜெயலலிதா!. அவரை மாற்றிய படம் இதுதான்!..
தமிழ் சினிமாவில் இந்த பழக்கத்தை இறுதிவரை கடைபிடித்து வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தானாம். இப்படி இருக்கையில் அவரது பாதையில் பயணித்த "மைக்" மோகன் தற்பொழுது வரை அப்படித்தான் இருந்து வருகின்றராம். ஒரு படம் வெற்றியடைந்ததும் ஒய்யாரமாக உட்கார நினைக்கும் நடிகர்கள் மத்தியில் தன்னிலையை மாற்றிக் கொள்ளமலிருந்த மோகனின் இந்த செயலுமே அவருக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுத்தந்ததாம்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று ஏராளமானோருக்கு சமீபத்தில் இவர் வழங்கிய அன்னதான செயல் பணத்தை விட மனித குணத்திற்கு இவர் வழங்கும் முக்கியத்துவதிற்கான சான்றாய் அமைந்தது. விஜய்யின் கோட் படத்தில் நடித்து வரும் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு இவரது ரசிகர்கள் மனதில் இப்பொழுதே எழத்துவங்கியுள்ளது.