‘மைக் மோகன்’ பட்டம் பிடிக்கலையா? மனுஷன் சொல்ல வேண்டியதுதானே.. மோகன் சொன்னதை கேளுங்க

Actor Mohan: 80கள் காலகட்டத்தில் இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகனாக உலா வந்தவர் நடிகர் மோகன். இவருக்கு அழகு சேர்ப்பதே அந்த சிரிப்புதான். அவருடைய சிரிப்புக்கு மயங்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பார்த்தவுடன் பெண்களை மயக்கும் முகம் ,அழகான தோற்றம் என சீக்கிரம் ரசிகர்களை கவர்ந்தவர் மோகன்.

வெள்ளி விழா நாயகன் என கொண்டாடப்பட்டவர். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் அனைத்துமே 100 நாட்களைக் கடந்து ஓடியவை. இவர் அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களில் 300 நாட்களை தாண்டி ஓடிய திரைப்படங்களை கொடுத்த ஒரே ஹீரோ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் மோகன். இவருக்கு மைக் மோகன் என்ற பெயரும் உண்டு.

இதையும் படிங்க: இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு வந்த ஹரிசந்திர மகாராஜா!.. யாருன்னு நீங்களே பாருங்க!..

அது போல கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதனால் கோகிலா மோகன் என முதலில் அழைக்கப்பட்டார். அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, சரணாலயம், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம் ,இதயக்கோயில் இந்த ஐந்து படங்களில் மட்டும் தான் அவர் மைக்கை பிடித்து பாடி நடித்திருப்பார். ஆனால் அதன் பிறகு தான் அவருக்கு இன்று வரை மைக் மோகன் என்ற பெயர் வந்து கொண்டே இருக்கின்றது.

இதைப் பற்றி மோகன் இடம் இந்த பட்டம் கொடுக்கும் போது உங்களுக்கு சந்தோஷமாக இருந்ததா? அல்லது என்ன மாதிரி நீங்கள் உணர்ந்தீர்கள் என்ற ஒரு கேள்வியை தொகுப்பாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த மோகன் அதற்கு காரணம் என்னுடைய படத்தில் அமைந்த பாடல்கள் தான். பயணங்கள் முடிவதில்லை படத்தில் மைக்கை பிடித்து ஒரு பாட்டில் நான் பாடியிருப்பேன்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறகு எவன்டா!.. என்னையை போட்டு அடிக்காதீங்கடா!.. ஆடியோ லாஞ்சில் கதறிய அனிருத்!

கேன்சர் நோயாளியாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். அந்த நேரத்தில் உயிரை கொடுத்து பாடுவது போல நடித்திருப்பேன். அந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட். அந்த நேரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியன் இந்தப் பாடலை மோகன் பாடியதா இல்லை நான் பாடியதா என அப்போது கேட்டார்.

அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. அதிலிருந்து மக்கள் எனக்கு அந்த பட்டத்தை கொடுத்து விட்டனர். ஆமாம் மோகன் பாடியதுதான் என நம்பியும் விட்டனர். இதற்கெல்லாம் காரணம் படத்தில் அமைந்த பாடல்கள் தான். அதனால் இந்த பட்டம் கொடுத்ததை பற்றி ஓகே. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என பிடித்தும் பிடிக்காமல் மாதிரியுமாக அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: அவர பாக்குறதே பெருசு! என் பையன் செஞ்ச காரியத்தால் ஆடிப் போயிட்டேன்.. அஜித்தை பற்றி சூரி

 

Related Articles

Next Story