ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறகு எவன்டா!.. என்னையை போட்டு அடிக்காதீங்கடா!.. ஆடியோ லாஞ்சில் கதறிய அனிருத்!

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்திற்கான ஹைப் அதிகரிக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்து எதிர்பார்க்கும் ஒட்டுமொத்தமாக சுக்கு நூறாகி விட்டது.

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பெரிதாக பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. சிம்பு மட்டும் சிவகார்த்திகேயன் பங்கிற்கு போவதாக தகவல்கள் வெளியான நிலையில், சிம்பு மட்டுமே நள்ளிரவு நேரத்தில் வந்து கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் வரவில்லை. படத்தில் நடித்த சித்தார்த்தும் ஆளை காணவில்லை.3

இதையும் படிங்க: அவர பாக்குறதே பெருசு! என் பையன் செஞ்ச காரியத்தால் ஆடிப் போயிட்டேன்.. அஜித்தை பற்றி சூரி

ஆதிதி ராவுடன் இத்தாலிக்கு இப்பவே ஹனிமூன் டூர் சென்று ரசிகர்களை வெறுப்பேற்ற போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்தியன் 2 படத்தில் நடித்த சிலர் உயிரோடு இல்லை. சிலர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று இருந்தால் நிச்சயம் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள்.

இந்தியன் 2 படத்துக்காக அனிருத் இசையமைத்த ஆறு பாடல்களும் சூப்பராக வந்துள்ளதாக இயக்குனர் ஷங்கர் கடமைக்காக சொன்னது போலவே பேசியது ரசிகர்களை மேலும் அப்செட் ஆக்கியது. அதிலும் அந்த கதற விடுறோம் பாடலை இந்தியன் தாத்தாவுக்கு பதிலாக மோடி தாத்தாவுக்கு எடிட் செய்து பாஜகவி்னர் தற்போது 3வது முறையாக மோடியே பிரதமர் ஆவார் என அவர்களுக்கான பாடலாக மாற்றிக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலை கைவிட்ட சினிமா உலகம்!.. கை கொடுத்த ரஜினி!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

அனிருத்தை ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் மட்டுமின்றி கமல்ஹாசன் ரசிகர்களும் போட்டு பொளந்து வருகின்றனர். எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என அறிந்து கொண்ட அனிருத் இந்தியன் 2 இசை வெளியிட்டு விழாவில் பேசியபோது அவரோட காலம் இவரோட காலம்னுலாம் சோஷியல் மீடியால சொல்றாங்க.. ஆனால், ஷங்கர் சார் சொல்வது போல 6க்கு பிறகு 7வன்டா.. ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பிறகு எவன்டா என பேசி ஏ.ஆர். ரஹ்மான் தான் கிரேட்டு, நான் பாவம் என்னையை போட்டு அடிக்காதீங்க என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார்.

இந்தியன் 2 படம் தப்பித்து விட்டால் அனிருத்தும் சேர்ந்து தப்பித்து விடுவார். இல்லையென்றால் மொத்த பழியையும் தூக்கி கமல் ரசிகர்கள் அனிருத் தலைமீது போட்டு விடுவார்கள்.

இதையும் படிங்க: டிரான்ஃபர்மேஷனா இப்படி இருக்கனும்டா! இந்தியன் – இந்தியன்2 அனிருத்தின் வளர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

 

Related Articles

Next Story