என் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது!.. நெகிழும் மைக் மோகன்!...

by சிவா |
mohan
X

மூடுபனி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படம் மூலம் கன்னட படத்தில் அறிமுகமானவர்தான் மைக் மோகன். கோகிலா படத்தின் ஹீரோ கமல்ஹாசன். சென்னையில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் கோகிலாதான்.

அதன்பின் ‘பயணங்கள் முடிவதில்லை’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஹீரோயிசம் காட்டாமல், சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல், துவக்கம் முதல் கடைசி வரை அந்த கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்த நடிகராக மோகன் இருந்தார்.

இதையும் படிங்க: முதல் நாளிலேயே அடிவாங்கிய மோகன் படம்!.. ’ஹரா’ வசூல் இவ்வளவுதானா?.. அப்போ ’கோட்’ நிலைமை?

மோகனின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது. பல படங்கள் 100 நாட்களை தாண்டி ஒடியது. அவரின் படத்திற்கு அவரின் படமே போட்டியாக வெளியாகி எல்லா படங்களும் ஓடிய வரலாறும் மோகனுக்கு உண்டு. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், நெகட்டிவ் வேடம் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்தார் மோகன்.

ஒரு இமேஜுக்குள் சிக்காமல் தனது கதாபாத்திரம் பிடித்திருந்திருந்தால் வித்தியாசமான கதைகளிலும் நடித்தார். இவருக்கென ரசிகர் கூட்டம் இருந்தது. குறிப்பாக பெண்கள் ரசிகர்கள் அதிகளவில் இருந்தார்கள். 90களில் இவரின் மார்க்கெட் சரிந்தது. ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார்.

இதையும் படிங்க: நான் வெறும் குதிரை!.. எனக்கு மரியாதையே இல்ல!.. ரசிகர்களிடம் அன்றே சொன்ன ரஜினி!…

இப்போது ஹரா மற்றும் கோட் ஆகிய படங்கள் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் ஹரா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்பதால் படம் ரசிகர்களை கவரவில்லை. அதேநேரம், கோட் படத்தில் விஜயுடன் நடித்திருப்பதால் இந்த படம் மோகனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றி பேசிய மோகன் ‘நான் பெங்களூரில் இருக்கும்போது எம்.ஜி.ஆரின் படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் எப்படி ஸ்டாரோ நிஜ வாழ்விலும் அப்படித்தான். சினிமாவில் இருக்கும் வசீகரம் நிஜத்தில் அவரை பார்த்தாலும் நமக்கு வரும். ஒருமுறை என் படத்தை பார்த்துவிட்டு ‘உனக்கு நாளை காலை சாப்பாடு என் வீட்டில். நேரில் பேசுவோம்’என சொல்லிவிட்டு போய்விட்டார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. எனக்கு பல அறிவுரைகளையும் சொன்னார். மிகவும் அன்பாக பேசினார்’ என மோகன் சொல்லி இருந்தார்.

Next Story