Cinema History
மௌனராகத்தை விட இதயக்கோவில் தான் மோகனுக்குப் பிடிக்குமாம்… அட இதுதான் காரணமா?
80களில் தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் மைக் மோகன். இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைப்பார்கள். ஏன்னா இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கடந்து ஓடி சாதனை படைத்து விடும்.
நடிகர் மோகன் தற்போது தமிழ்த்திரை உலகில் கம்பேக் கொடுக்கும் வகையில் ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. தொடர்ந்து தளபதி விஜய் நடித்த கோட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் மோகனின் பேட்டி தான் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் ஊடகம் ஒன்றில் நடிகை சுஹாசினி மோகனை பேட்டி எடுத்தார். அவர்களுக்குள் என்னென்ன விஷயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
மோகன் பல்லவி அனுபல்லவி என்ற படத்தை கன்னடத்தில் மணிரத்னம் இயக்க காரணமாக இருந்தாராம். சத்யஜோதி தியாகராஜன் அப்பா வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தரராஜன் எங்கிட்ட கால்ஷீட் கேட்டார். ‘மணிரத்னம் டைரக்ட் பண்றதா இருந்தா நான் கால்ஷீட் கொடுக்கிறேன்’னு சொன்னேன். மணிரத்னத்துக்கு அதுதான் முதல் படம்.
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை படங்கள் இந்திக்குப் போகும்போது என்னை நடிக்க அழைத்தார்கள். அப்போது நான் பிசியாக இருந்தால் முடியாமல் போனது. அதே போல சுஹாசினியும் கிளிஞ்சல்கள் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போகக் காரணம் அந்தப் படத்தில் வந்த கிஸ் சீன் தான் என்றார்.
அதே போல குங்குமச்சிமிழ் படத்தில் ரேவதி நடித்ததால் எனக்கு என்ன பெரிய கேரக்டர் இருக்கப் போகிறது என்று அதில் நடிக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் அப்போது விசாகப்பட்டினம், ஆந்திராவில் இருந்ததால் எனக்கு நைட் சூட்டிங்கில் வந்து கலந்து கொண்டு நடிக்க முடியவில்லை என்று சுஹாசினி சொன்னார்.
மௌனராகம் பெரிய படம் தான். அதுல எல்லாமே மணிரத்னம் சாருடையது. அது அவருக்குப் பெரிய படம். பேவரைட்டா இருக்கலாம். ஆனா இதயக்கோவில் படத்துக்கு கோவைத்தம்பியோட கதை இலாகாவில் இருந்து கதை, வசனம் வரும். இவர் இயக்கம் மட்டும் தான். ஸ்பாட்ல வச்சி அந்த ஸ்கிரிப்ட படிச்சதும் அதை விஷூவலாகக் கொண்டு வர கேரக்டருடன் கனெக்ட் செய்வாரு. அது பிரமாதமா இருக்கும். அந்த வகையில் என்னோட பேவரைட் படம் மௌனராகம் தான் என்றார் மோகன்.