Mike Mohan: தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்த நடிகராக வலம் வந்தார் நடிகர் மோகன். இரவு நேரங்களில் பலரது தாலாட்டு பாடலாகவே மோகன் படத்தில் அமைந்த பாடல்கள் விளங்கியது. அந்தளவுக்கு மோகன் நடித்த படங்களின் பாடல்கள் காதுக்கு செம்மை சேர்க்கும் வண்ணம் அமைந்தன.
அதுமட்டுமில்லாமல் மேடைகளில் இவரே பாடுவது போன்று அந்தப் பாடலில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். பார்க்கும் ரசிகர்களுக்கு உண்மையிலேயே மோகன்தான் பாடி நடிக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தும். அதனாலேயே இவரை மைக் மோகன் என்றே அழைக்க தொடங்கினார்கள்.
இதையும் படிங்க: ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!
மோகன் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் சில்வர் ஜூப்ளி படங்களாகவே அமைந்தன. முதன் முதலில் கமல் நடித்த ஒரு கன்னட படத்தில் தான் மோகன் அறிமுகமானார். ஆனால் அதுவரைக்கும் கமலுக்கே தெரிந்திருக்காது பின்னாளில் மோகன்தான் தனக்கு டஃப் கொடுக்கும் நடிகராக வருவார் என்று.
தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் இயக்குனர் மகேந்திரன் முதன் முதலில் மோகனை அறிமுகம் செய்தார். இப்படி பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த மோகனின் மார்கெட் உயர உயர ஒரு வருடத்தில் 19 படங்களில் நடிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!
1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார். இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஹரா. இந்தப் படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வரவிருக்கிறது.
இதனிடையில் ஹரா படத்தின் முதல் சிங்கிளை மலேசியாவில் போய் வெளியிட்டிருக்கிறார் மோகன். எந்த கலை நிகழ்ச்சிக்கும் போக விரும்பாத மோகன் தன் நண்பர் அழைத்தார் என மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்தே பல ரசிகர்கள் முன்னிலையில் தான் நடிக்கும் ஹரா படத்தின் ஒரு சிங்கிளை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மாப்ள நீ செம கில்லாடி!… தலைவர் 171 படத்தை அவசரமாக அறிவித்தன் பின்னணி இதுதான்!.
மலேசியாவில் விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சத்தமே இல்லாமல் வந்த வேலையை முடித்து விட்டு சென்றிருக்கிறார் மைக் மோகன்.
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…