வெள்ளி விழா மட்டுமல்ல!. அதையும் தாண்டி ஓடிய மைக் மோகன் படங்கள்!. லிஸ்ட் இதோ!..

80களில் தமிழ்சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் மோகன். வெள்ளிவிழா நாயகன்னும் சொல்வாங்க. இவரது படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா தான். அதையும் தாண்டியும் பல படங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. என்னென்னன்னு பார்ப்போமா...

1980ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது. தேசிய விருது, மாநில விருதுகளையும் வென்றுள்ளது. 1981ல் துரை இயக்கத்தில் வெளியான படம் கிளிஞ்சல்கள். 250 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 1982ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை. இந்தப் படம் ஒன்றரை வருடம் அதாவது 500 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

இதையும் படிங்க... கமலின் அந்த ஹிட் பாட்டு தான் கில்லி ஷா லா லா… உண்மையை சொன்ன கபிலன்!…

1982ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம் கோபுரங்கள் சாய்வதில்லை. 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1984ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் நான் பாடும் பாடல். இது 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

1983ல் வெளியான படம் இளமைக்காலங்கள். மணிவண்ணன் இயக்கியுள்ளார். இது 200 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 1983ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் சரணாலயம். இதுவும் வெள்ளி விழா தான். 1984ல் விஜயன் இயக்கத்தில் வெளியான படம் விதி. இதுவும் 500 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

1984ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம் நூறாவது நாள். இது 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. அதே ஆண்டில் மணிவண்ணன் இயக்கிய படம் 24 மணி நேரம். இதுவும் 200 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் கே.ஆர்.விஜயன் இயக்கிய படம் ஓசை. இதுவும் வெள்ளி விழா. அதே ஆண்டில் மோகன் கெஸ்ட் ரோலில் நடித்த படம் உன்னை நான் சந்தித்தேன். இதுவும் வெள்ளி விழா.

அதே ஆண்டில் விஜயகாந்த், மோகன் நடித்த படம் வேங்கையின் மைந்தன். இதுவும் வெள்ளி விழா தான். 1985ல் கே.ரங்கராஜ் இயக்கிய படம் உதயகீதம். இதுவும் 200 நாள்களைக் கடந்து ஓடியது. அதே ஆண்டில் மனோபாலா இயக்கிய படம் பிள்ளை நிலா. இதுவும் 200 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. அதே ஆண்டில் ஸ்ரீதர் இயக்கிய படம் தென்றதே என்னைத் தொடு. பாடல்கள் செம மாஸ். இது 250 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது.

Vithi movie

Vithi movie

1985ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் குங்குமச்சிமிழ். இது வெள்ளி விழா படம். 1985ல் மணிரத்னம் இயக்கிய படம் இதயகோயில். 200 நாள்களுக்கு மேல் ஓடியது. 1986ல் டிசம்பர் பூக்கள் இளையராஜா இசையில் அசத்தலாக வந்தது. இதுவும் வெள்ளி விழா தான். 1986ல் ஆர்.ரங்கராஜன் இயக்கிய படம் உயிரே உனக்காக. இதுவும் வெள்ளி விழா. அதே ஆண்டில் மணிரத்னம் இயக்கிய படம் மௌனராகம். இதுவும் வெள்ளி விழா தான். 250 நாள்கள் ஓடியது.

இதையும் படிங்க... நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

1986ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் மெல்லத் திறந்தது கதவு. பாடல்கள் செம மாஸ். 200 நாள்கள் ஓடியது. 1987ல் பாலுமகேந்திரா இயக்கிய படம் ரெட்டை வால் குருவி. இதுல பாடல்கள் செம மாஸ். இதுவும் வெள்ளி விழா. 1987ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம் தீர்த்தக்கரையினிலே. இதுவும் வெள்ளி விழா தான்.

1988ல் ராமநாராயணன் இயக்கிய படம் சகாதேவன், மகாதேவன். மோகன், எஸ்.வி.சேகர் இணைந்து நடித்த படம். இதுவும் வெள்ளி விழா தான்.

 

Related Articles

Next Story