ஐயம் சாரி!.. விஜய் படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகர்!.. அட அவரா?!..
Actor Vijay: இன்று கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே படம் ஏகப்பட்ட கோடிகளில் பிஸினஸ் ஆகிவிடுகின்றன. அதுவும் போக கிட்டத்தட்ட 200 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் விமர்சன ரீதியாக ஓடுகிறதோ இல்லையோ வசூல் அளவில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் பெற்றுத்தர கூடிய நடிகர்களாக ஒரு சில நடிகர்கள் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு சீன்!.. வேட்டையன் படத்தால் நடந்த பெரிய மேஜிக்.. தலைவர்னா சும்மாவா!..
அதில் ஒருவராக விஜய் இருக்கிறார். இந்த நிலையில் எப்பொழுதும் தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் கே.ராஜன். இவரும் ஒரு சில படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். எப்பொழுது மேடை ஏறி பேசினாலும் பெரிய நடிகர்களை குறை கூறுவதும் தயாரிப்பாளர்களின் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களுக்காகத்தான் பேசி வருவார்.
அதே போல் ஒரு சம்பவத்தைத்தான் சமீபத்தில் ஒரு பட விழாவின் போது பேசியிருக்கிறார் கே.ராஜன். அதாவது விஜய் நடிப்பில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான படம்தான் தலைவா. அந்தப் படம் பெரிய பிரச்சினைகளை கடந்து ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: அமீர் வாயை அடைக்கணும்… ஆதரவு தரும் பிரபலங்களிடம் நடக்கும் பேரம்.. அதிர்ச்சி தந்த விமர்சகர்..!
அந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தாராம் எம்.எஸ்.பாஸ்கர். அதற்காக அவருக்கு 1.50 லட்சம் அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் எம்.எஸ்.பாஸ்கரால் தலைவா படத்தில் நடிக்க முடியவில்லையாம்.
அதன் பிறகு தயாரிப்பாளரிடம் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை. அதனால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என பாஸ்கர் தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு சென்றாராம். இதை குறிப்பிட்டு பேசிய கே.ராஜன் ‘இந்த மாதிரி எந்த நடிகராக இருக்கிறார்களா? வாங்கிய அட்வான்ஸ் தொகையை கூட மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் எம்.எஸ்.பாஸ்கர் இப்படி செய்தது அவருடைய நல்ல எண்ணம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு பேரு வச்சவங்க இத செய்யாமலா இருப்பீங்க! மாயாவை பொழந்து கட்டிய கமல் – என்ன பேரு தெரியுமா?