Munishkanth: தமிழ் சினிமாவில் காமெடி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிபட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் முனிஸ்காந்த். இவர் தமிழ் திரைப்படமான காதல் கிறுக்கன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின் ஆழ்வார், தம்பிகோட்டை, கடல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் இவ்வளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் முண்டாசுப்பட்டி. இப்படத்தில் இவரின் காமெடி மக்களால் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
இதையும் வாசிங்க:விஜய்க்காக இத செஞ்ச நீங்க..! அத ஏன் மிஸ் பண்ணீங்க..! எஸ்.ஏ.சந்திரசேகரை சீண்டிய பத்திரிக்கையாளர்..
மேலும் ராட்சசன் திரைப்படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை காட்டியிருந்தார். சண்டகோழி2, சர்தார், டான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் வரும்போது காமெடியனாக நடிக்க வேண்டும் என வரவில்லையாம்.
ஆனால் முண்டாசுபட்டியில் நடித்ததாலேயே இவருக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வருவதாக தெரிவித்திருந்தார். இதனால் இவர் தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறாராம். இவர் விஜயகாந்தின் தீவிர ரசிகராம்.
இதையும் வாசிங்க:ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் வசூல் இத்தனை கோடியா..? ஜப்பான் படத்தினை தூக்கி சாப்பிட்ட பக்கா சம்பவம்..!
இவர் பல திரைப்படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தார். ஒரு முறை இவர் எங்கள் அண்ணா படபிடிப்பில் இருந்த போது அங்கு விஜயகாந்த் இருந்துள்ளார். அப்போது அப்படத்தில் வரும் சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த காட்சியின் ஒத்திகை நடந்துள்ளது. கிட்டதட்ட ஒன்றரை நிமிட ஷாட்டாம்.
விஜயகாந்த் அந்த ஒத்திகையில் கொஞ்சம் கூட எதையும் மிஸ் செய்யாமல் தொடர்ந்து சண்டை போட்டாராம். விஜயகாந்த் அந்த காட்சிக்கு ஒத்திகை பார்த்தவுடன் உடனே டேக் போகலாமா என கேட்டாரம். அதை கண்டு முனிஷ்காந்த் வியப்பில் ஆழ்ந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:மோசமா கதை சொல்றவன் முதலிடத்தில் இருக்கான்!. விஜய் – லோகேஷை சொன்னாரா கோபி நாயனார்!?.
நடிகை நயன்தாரா…
Kamal: ரசிகர்கள்…
Biggboss Tamil:தமிழ்…
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…