மோசமா கதை சொல்றவன் முதலிடத்தில் இருக்கான்!. விஜய் – லோகேஷை சொன்னாரா கோபி நாயனார்!?.

0
717
gopi

Vijaya lokesh kanagaraj: சினிமா துவங்கியது முதல் 70 வரை நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தது. ஒரு கதாசிரியரால் நல்ல கதை எழுதப்பட்டு அதை அப்போதைய பிரபல இயக்குனர்கள் படமாக எடுப்பார்கள். சினிமாவில் கதாசிரியர்களுக்கு முக்கியத்துவமும் இருந்தது. சிவாஜி நடித்த அத்தனை படங்களிலுமே நல்ல கதைகள் இருக்கும்.

பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோரும் நல்ல கதைகளை சினிமாவாக எடுத்தனர். அதனால்தான் பதினாறு வயதினிலே, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை போன்ற படங்கள் வெளிவந்தன. அதன்பின் மணிரத்னம் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு பின் சேரன், தங்கர் பச்சான், வசந்த், பாலா, வெற்றி மாறன் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே கதாநாயகன் பின்னால் போகாமல் கதைக்கு ஏற்ற நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் பிகிலு!. விஜயை பங்கமாக கலாய்த்த புளூசட்ட மாறன்…

ஆனால், இப்போது நடிகர்களுக்காக மட்டுமே கதைகள் உருவாக்கப்படுகிறது. அதனால்தான் நல்ல கதைகள் இல்லாமல் ஹீரோயிசம் கொண்ட கதைகள் மட்டுமே அதிகம் வருகிறது. ஜெயிலர், லியோ பட கதைகள் கூட அப்படித்தான். அதிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், லியோ ஆகிய படங்களில் ஹீரோயிசம் தூக்கலாக இருந்தது.

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை வைத்திருப்பவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்கிற புகாரும் இருக்கிறது. நயன்தாராவை வைத்து அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். இவரிடம் பல நல்ல கதைகள் இருக்கிறது. ஆனாலும், பெரிய நடிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

இதையும் படிங்க: நீ ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!. சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் புளூசட்டமாறன்!..

இப்போது நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஒரு வார இதழில் பேட்டி கொடுத்த நயினார் ‘இப்பல்லாம் நடிகர்களை வச்சி கதை சொல்றாங்க.. யாரை வளர விடணும், யார் வளரக்கூடாது என்பதையும் அந்த நடிகர்கள்தான் முடிவெடுக்குறாங்க, நல்ல கதை சொல்றவர் வரிசையில் நூறாவது இடத்தில் இருக்கான். மோசமான கதையை வச்சிருக்கவன் முதல் இடத்துல இருக்கான். ஒரு மோசமான ஹீரோ யாரை இயக்குனராக்கனும், யாரோட கதை எடுக்கப்படணும், அதை யார் தயாரிக்கணும் என்கிற வரைக்கும் முடிவு பண்ணுறான். சினிமா எப்படி சீர்கெட்டு போயிருக்கு பாருங்க’ என பொங்கியிருந்தார்.

இதையடுத்து, கோபி நயினார் சொன்ன அந்த ஹீரோ விஜய்தான் எனவும், அந்த மோசமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனவும் புளூசட்டமாறன் உட்பட பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் புளுசட்டமாறன் ‘சினிமாவில் உள்ள மிக அரிதான மானஸ்தர்களில் கோபி நயினாரும் ஒருவர். பங்களா வாசலில் வீசப்படும் எச்சை எலும்பு துண்டுகளுக்கு ஜால்ரா போடும் சில ஈன ஜென்மங்களுக்கு இது புரிந்தால் சரி. புரிந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்‌‌’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் வசூல் இத்தனை கோடியா..? ஜப்பான் படத்தினை தூக்கி சாப்பிட்ட பக்கா சம்பவம்..!

google news