அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் பிகிலு!. விஜயை பங்கமாக கலாய்த்த புளூசட்ட மாறன்...

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது 1950களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. எஸ்.எஸ்.ஆர், சிவாஜி, எம்.ஜி.ஆர் என பலரும் அரசியலுக்கு வந்தனர். இதில் எம்.ஜி.ஆர் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சராக மாறினார். அவருக்கு பின் அவரின் கட்சியை நடத்திய ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக மாறினார்.

இப்படி சினிமா துறையிலிருந்த 2 பேர் தமிழக முதல்வராக மாறியதால் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களுக்கு அரசியலில் நுழைந்து தமிழகத்தை ஆளவேண்டும் என்கிற ஆசை வருவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ரஜினி ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என 25 வருடங்கள் சொல்லி அவரின் ரசிகர்களை நம்ப வைத்தார். ஆனால், அவர் வரவில்லை.

இதையும் படிங்க: ரஜினிக்கு கலாநிதி மாறன்னா விஜய்க்கு இவர்தான்! இவர விட்டுராதீங்க தளபதி – 2026க்கு தேவைப்படும் முக்கியமான பீஸு

இதில் விஜயகாந்த் மட்டுமே கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜயகாந்துக்கு மட்டுமே மக்கள் ஆதரவு கொடுத்தனர். கமலும் கட்சி துவங்கினார். ஆனால், பெரிதாக செல்ப் எடுக்கவில்லை. அதேபோல், ரஜினியை தொடர்ந்து விஜய்க்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்கான பணிகளை அவர் எப்போதோ துவங்கிவிட்டார்.

அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவர்கள் போட்டி போடவிருக்கிறார்கள். விஜயின் ரசிகர்களோ 2026ல் விஜய்தான் முதல்வர் என்கிற ஆசையிலும், கனவிலும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..

நேற்று நடந்த லியோ வெற்றி விழாவில் விஜயிடம் அவரின் அரசியல் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது. 2026ல் என்ன நடக்கும் என கேட்டதற்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என விஜய் சொன்னார். இதிலிருந்தே அவர் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளார் என்பது தெரிகிறது.

இதையடுத்து, பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘அதற்கு முதலில் கட்சி துவங்கணும் பிகிலு.. தேர்தல்ல ஜெயிக்கணும் பிகிலு.. இதெல்லாம் ரெண்டு வருஷத்துல நடக்கவே நடக்காது பிகிலு’ என பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.. இதையடுத்து வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: இது அப்பவே சொல்லியிருக்கலாமே விஜய்!. சைலண்ட்டா இருந்து.. யூடர்ன் பண்ணி.. டேபிளை உடைச்சி!..

 

Related Articles

Next Story