Connect with us
rajini

Cinema News

ரஜினிக்கு கலாநிதி மாறன்னா விஜய்க்கு இவர்தான்! – 2026க்கு தேவைப்படும் முக்கியமான பீஸு

Leo Success Meet:  நேற்று மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது லியோ படத்தின் சக்சஸ் மீட். இந்த விழாவிற்கு படக்குழுவைச் சார்ந்த அத்தனை பிரபலங்களும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். மேடையில் ஏறிய அத்தனை பேரும் விஜயை சகட்டு மானக்கி புகழ்ந்து தள்ளினார்கள்.

அதில் அர்ஜூன் இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த ஒரு அற்புதமான நடிகர் விஜய் என்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். பெரிய தடைகளை தாண்டி இந்த விழா நேரு உள்விளையாட்டரங்கில் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதையும் படிங்க: மனைவியோட ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில் கிங்காங்… வாழ்க்கையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…

இந்த நிலையில் ஜெயிலர் விழாவில் எப்படி ரஜினியை புகழ்ந்து கலாநிதி மாறன் தெகட்ட தெகட்ட பேசினாரோ அதே போல் ஒரு சம்பவம் லியோ வெற்றிவிழாவிலும் நடந்தது. மேடையில் ஏறிய மிஷ்கின் ஆரம்பித்ததில் இருந்து தன் பேச்சை முடிக்கும் வரை விஜயை பற்றியே புகழ்ந்து பேசிக் கொண்டு வந்தார். அது ஒரு கட்டத்தில் விஜய் வெட்கப்படவும் வைத்தது.

அதாவது நான் படித்ததில் இரண்டு லெஜண்டுகள் என்றால் ஒன்று மைக்கேல் ஜாக்சன், ஒன்று புரூஸ்லி. ஆனால் என் கண்ணால் பார்த்த  லெஜண்ட் என்றால் அது விஜய். 23 வருஷமா என் தம்பியை பார்க்கிறேன். இத்தனை வருஷத்துல் அவருடைய அன்பு, பாசம், கடும் உழைப்பு , அந்த புன் சிரிப்பு எதுவுமே மாறவில்லை.இந்த மாதிரி ஒரு மனுஷனை பார்க்கவே முடியாது.

இதையும் படிங்க: அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..

இந்தியாவிலேயே படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே ஸ்பாட்டில் இருக்கக் கூடிய நடிகர்  விஜய்தான் என்று கூறினார். இத்தனை புத்தகங்களை படித்த மிஷ்கின் சிவாஜியை பற்றி படிக்க மறந்துவிட்டாரோ என்னவோ. உழைப்பால் மட்டுமே வந்த மகா கலைஞன் விஜய் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார். மற்றவர்கள் எப்படி வந்தார்கள் என்பதையும் சொல்லியிருக்கலாம் மிஷ்கின்.

மேலும் லியோ படத்தை விஜய் தம்பி பார்த்துட்டானு சொன்னதும் எனக்கு அஞ்சலி போஸ்டர் எல்லாம் ஒட்டுனாங்க. ஆனால் அது கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் பண்ணியிருக்க மாட்டார்கள். விஜயுடன் இருக்கும் போது எப்படி இறக்க முடியும்? வாழத்தானே முடியும்  என்று கூறி விஜயின் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயன்றார்.

இதையும் படிங்க: இது அப்பவே சொல்லியிருக்கலாமே விஜய்!. சைலண்ட்டா இருந்து.. யூடர்ன் பண்ணி.. டேபிளை உடைச்சி!..

மேலும் இந்த வாழ்க்கையில் நிஜமான ஹீரோக்கள் ஒரு சில பேர்தான். ஆனால் விஜய் சினிமாவிலும் ஹீரோ. நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்களை ஆரவாரப்படுத்திக் கொண்டே இருந்தார் மிஷ்கின். இவர் பேச்சை கேட்டு  நெட்டிசன்கள் ‘தளபதி மிஷ்கினை விட்டுட வேண்டாம். தேர்தலுக்கு சிறந்த பேச்சாளராக இருக்கக் கூடிய எல்லா தகுதியும் இருக்கிறது’ என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top