“இவனை வச்சி படம் எடுத்தா நஷ்டம்தான்”… சொந்த தந்தையாலேயே ஓரங்கட்டப்பட்ட முரளி… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

by Arun Prasad |   ( Updated:2022-11-17 09:44:15  )
Murali
X

Murali

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் வண்ணம் நடித்துவிட்டுச் செல்வார்கள். அந்த லிஸ்ட்டில் இருக்கும் ஒருவர்தான் முரளி. இவருக்கு ரசிகர்கள் இருப்பார்களே தவிர ஹேட்டர்ஸ் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு ஜீரோ ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த நடிகர் முரளி. “பகல் நிலவு”, “கீதாஞ்சலி”, “புது வசந்தம்”, “இதயம்”, “வெற்றிக்கொடிகட்டு” போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முரளி நடித்திருக்கிறார்.

Murali

Murali

இதயம் முரளி

முரளி நடித்த திரைப்படங்களில் குறிப்பாக “இதயம்” திரைப்படம் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அத்திரைப்படத்தில் ராஜா என்ற கதாப்பாத்திரத்தில் முரளி நடித்திருந்தார். “இதயம்” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து இதயம் முரளி என்றே பலரும் அழைக்கத் தொடங்கினர்.

மறைவு

தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த முரளி, கடந்த 2010 ஆம் ஆண்டு தனது 46 ஆவது வயதில் இறுதய கோளாறால் மரணமடைந்தார். இவரது மரணம் தமிழ் சினிமாவிற்கே பெரும் இழப்பாக கருதப்பட்டது. முரளி நம்மை விட்டு மறைந்தாலும் அவரது திரைப்படங்களின் மூலம் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். இவ்வாறு தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த முரளி, சினிமாவுக்குள் நுழைந்த அந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

Siddalingaiah

Siddalingaiah

டாப் இயக்குனரின் மகன்

கன்னட சினிமாவில் “நம்ம சம்சாரா”, “ஹேமாவதி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் சித்தலிங்கய்யா. அப்படிப்பட்ட டாப் இயக்குனருக்கு மகனாக பிறந்தவர்தான் முரளி.

உதவி இயக்குனர்

தொடக்கத்தில் தனது தந்தை இயக்கும் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் முரளி. அப்போது நடிகர்களுக்கு அழகாக வசனம் சொல்லிக்கொடுப்பாராம். தனது மகனுக்கு இயக்குனராகும் தகுதி நிச்சயமாக இருக்கிறது என நினைத்தாராம் சித்தலிங்கய்யா. அப்போது ஒரு நாள் முரளியின் தாயார் சித்தலிங்கய்யாவிடம் “நமது மகனை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கலாமே” என வற்புறுத்தியுள்ளார். அதற்கு சித்தலிங்கய்யா “சரி, நான் படம் எடுக்குறேன். 25 லட்ச ரூபாய் நஷ்டம்ன்னு நினைச்சிக்கிறேன்” என சலித்துக்கொண்டாராம்.

ஒரு கோடி லாபம்

தனது மனைவியாரின் ஆசைக்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சித்தலிங்கய்யா முரளியை வைத்து “பிரேம பருவா” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நிச்சயமாக தோல்வி அடையத்தான் போகிறது என நினைத்துக்கொண்டேதான் சித்தலிங்கய்யா இத்திரைப்படத்தை இயக்கினாராம். ஆனால் எதிர்பாரா விதமாக “பிரேம பருவா” திரைப்படம் கோடி ரூபாய் வசூல் ஆனதாம்.

இதையும் படிங்க: “சிவாஜி படத்திற்கு தடை”… சென்சார் போர்டு எடுத்த அதிரடி முடிவு… என்ன காரணம் தெரியுமா ??

K Balachander

K Balachander

கே.பாலச்சந்தர்

கன்னட சினிமாவில் “பிரேம பருவா” திரைப்படத்தின் வெற்றியை பார்த்த பாலச்சந்தர், அத்திரைப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவெடுத்தார். மேலும் அதில் முரளியையே கதாநாயகனாக தேர்வு செய்தார். இவ்வாறுதான் முரளி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Murali

Murali

பூவிலங்கு

“பிரேம பருவா” தமிழ் ரீமேக்கிற்கு “பூவிலங்கு” என டைட்டில் வைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முரளிக்கு ஜோடியாக குயிலி நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அமீர்ஜான் என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகராக மாறிப்போனார் முரளி.

Next Story