Cinema News
கேப்டன் மறைவிற்கு வந்திருந்தா உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்குமா? வடிவேலு பற்றி முத்துக்காளையின் பதில்
Actor Vadivelu: விஜயகாந்தின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரஜினி, கமல் பீக்கில் இருக்கும் போதே தனி ஆளாக நின்று மக்கள் மத்தியில் அவர்களுக்கு இணையாக ஜொலித்தவர்.
பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் நஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த சம்பளத்தில் சில சமயங்களில் சம்பளமே வாங்காமலும் ஒரு சில படங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். இதனாலேயே தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராகவே காணப்பட்டார் கேப்டன்.
இதையும் படிங்க: சம்பளம் மட்டும் போதும்! கதை தேவையில்ல – அடுத்த படத்திற்கும் ஆப்பு வைக்க தயாராகும் ஜெயம் ரவி
இது நாள் வரை விஜயகாந்தை பற்றி யாருமே ஒரு போதும் குறை கூறியது இல்லை. அவரை பற்றி தவறான மீம்ஸ்களும் வந்ததில்லை. ஆனால் விஜயகாந்தை மிகவும் மோசமாக பேசியவர் என்றால் அது வடிவேலுதான். கட்சியில் இருக்கும் சண்டையின் காரணமாக விஜயகாந்தை எந்தளவு பேச முடியுமோ அந்தளவுக்கு திட்டி தீர்த்தார் வடிவேலு.
ஆனாலும் விஜயகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கேப்டன் மறைவிற்கு திரையுலகமே கூடியிருந்த நிலையில் வடிவேலு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த பிரச்சினையும் இல்லாத விஜய்க்கே அந்த நிலை என்றால் வடிவேலு வந்திருந்தால் என்னாகியிருக்கும் என முத்துக்காளையிடம் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்தின் பட வாய்ப்பை தட்டி பறிக்க நினைத்த நடிகர்!.. அது மட்டும் நடந்திருந்தா!…
வந்திருந்தால் அவர் உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்காது என்று பதில் கூறினார். அப்போ வராமல் இருக்கிறதுதான் நல்லது என தொகுப்பாளர் கேட்க, அதற்கு முத்துக்காளை கேப்டனை விட உயிரா பெரிசு என்பது போல கூறினார். இருந்தாலும் காலம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் என வடிவேலு பாணியில் முத்துக்காளை பேசினார்.