Cinema History
நீங்கலாம் பெரிய நடிகர்.. கொஞ்சம் மனசு வைங்க ப்ளீஸ்!.. நாகேஷிடம் கெஞ்சிய எம்.ஜி.ஆர்..
Actor nagesh: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பங்கு என்பது எப்போதும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. காமெடி நடிகர்கள் இல்லாமல் பெரும்பாலான இயக்குனர்கள் படம் எடுப்பதில்லை. என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமி, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சூரி என கடந்து இப்போது யோகிபாபுவிடம் வந்து நிற்கிறது.
ஒரு கமர்ஷியல் வெற்றிப்படத்திற்கு காமெடி காட்சிகள் முக்கியம் என்பதுதான் இயக்குனர்களின் கான்செப்ட். எனவே, கிடைக்கும் நடிகர்களை வைத்து எதையாவது செய்ய முயற்சி செய்வார்கள். 60களில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் நாகேஷ். மத்திய அரசு பணியை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் இவர்.
இதையும் படிங்க: திருவிளையாடல் தருமி வேடத்தை நாகேஷ் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?.. ஒரு ஆச்சர்ய தகவல்..
நாகேஷ் டைமிங்கில் அடிக்கும் காமெடிகளுக்கு நிகர் அவர் மட்டுமே. உங்க வயசு 23 இருக்குமா? என ஒரு பெண்ணிடம் கேட்பார். அந்த பெண் ‘கூட ஒன்னு சேர்த்துக்கோங்க’ என சொல்லார். உடனே ‘231?’ என்பார் நாகேஷ். அதுதான் நாகேஷ்.. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என பலருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களின் வெற்றிக்கு நாகேஷின் காமெடி தேவைப்பட்ட காலம் அது.
ஒருகட்டத்தில் ஒரேநாளில் 5 படங்களில் நடிப்பார். ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்து உடனே காரில் வேறு இடத்திற்கு போவார். இதனால், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் கூட படப்பிடிப்பில் நாகேஷுக்காக காத்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் படங்களில் நாகேஷுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். எம்.ஜி.ஆர் நடித்த பணக்கார குடும்பம் படத்தில் நாகேஷ் தாத்தா, மகன், பேரன் என 3 வேடங்களில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..
நாகேஷ் பிஸியாக இருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கே அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆர் நடித்த கலங்கரை விளக்கம் படத்தில் நாகேஷ் இல்லாத காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடித்து முடித்துவிட்டார். எம்.ஜி.ஆரோடு அவர் இணைந்து நடிக்கும் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. ஆனால், பல நாட்கள் ஆகியும் நாகேஷ் வரவில்லை.
கிட்டத்தட்ட அந்த படத்தை அவர் மறந்தே போயிருந்தார். வேறுவழியில்லாமல் எம்.ஜி.ஆரே அவரை தொலைப்பேசியில் அழைத்து ‘நாகேஷ் என்னை போன்ற சின்ன நடிகர்களின் வேலையெல்லாம் முடிந்துவிட்டது. நீங்க நடிக்கிற காட்சி மட்டும்தான் பாக்கி. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி படத்தை முடித்து கொடுங்கள்’ என சொல்ல நாகேஷுக்கு சுறுக்கென்று தைத்தது.
2 நாட்கள் ஒதுக்கி முழுக்க அவரின் காட்சிகளில் நடித்து கொடுத்தார். காமெடி காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டது. அதன்பின்னர்தான் எம்.ஜி.ஆரின் முகத்தை பார்க்கும் தைரியமே நாகேஷுக்கு வந்ததாம்.
இதையும் படிங்க: நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…