சம்பளத்தை வாங்க சுவர் ஏறி குதித்த நாகேஷ்!.. மனுசன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்காரே!...

by சிவா |
nagesh
X

Actor nagesh: சினிமாவில் ஒரு நடிகர் ஒரு இடத்தை பிடிப்பதற்கு பின்னால் பல முயற்சிகளும், உழைப்புகளும், அவமானங்களும் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு மட்டுமே தெரியும். வாய்ப்புக்காக படாத பாடு படவேண்டும். ஒரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் என யாராவது ஒருவர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் சம்பளம் கிடைக்க வேண்டும். துவக்கத்தில் நடிகர்களுக்கு பெரிய சம்பளம் கிடைக்காது. அதை வைத்து குடும்பத்தை ஓட்டவும் முடியாது. எனவே, பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து புகழடையும் வரை நடிகர்களின் வாழ்க்கை போராட்டம்தான்.

இதையும் படிங்க: லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

அப்படி சினிமாவில் போராடி வந்தவர்தான் நடிகர் நாகேஷ். 60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் என பலரின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கியவர். சினிமாவில் நுழைவதற்கு முன் மத்திய அரசு ரயில்வே பணியில் இருந்தவர் இவர். வேலை பார்த்துகொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி போராடி மேலே வந்தவர் இவர்.

நாகேஷுக்கு 'தாமரைக்குளம்' என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தோஷத்தில் வேலையை விட்டுவிட்டார். ஆனால், அந்த படத்தில் பல நடிகர்களும் நடிக்க நாகேஷின் நடிப்பு எடுபடவில்லை. மேலும், அப்படத்தில் நடித்ததற்கு அவருக்கு சம்பளமும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: தியேட்டருக்கு வந்த சிக்கல்!.. நாகேஷ் சொன்ன முதலிரவு கதை!.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!..

வேலையும் போய்விட்டதால் காசில்லாமல் கஷ்டப்பட்டார். நண்பர்களும் அவருக்கு உதவவில்லை. எனவே, தாமரைக்குளம் பட தயாரிப்பாளரை பார்த்து சம்பளத்தை கேட்போம் என நினைத்து அவரின் வீட்டுக்கு சென்றார். கசங்கிய சட்டையுடன் இருந்த நாகேஷை செக்யூரிட்ரி உள்ளே விடவில்லை. நாகேஷ் தனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசியும் பலனில்லை.

எனவே, வீட்டின் பின்புறம் சென்று சுவர் ஏறி குதித்து உள்ளே போனார் நாகேஷ். ஒரு அறையில் இருந்த தயாரிப்பாளரை பார்த்து பணம் கேட்டார். அவரோ பணம் இல்லை என மறுத்துவிட்டார். ‘இதற்காகவா சுவர் ஏறி குதித்தோம்’ என நொந்து கொண்டே போனார் நாகேஷ். உள்ளே இருந்து வெளியே வந்த நாகேஷை பார்த்து ஒன்றும் புரியாமல் முழித்தார் அந்த செக்யூரிட்டி.

இதையும் படிங்க: மகன் பிறந்தும் பார்க்க போகாத நாகேஷ்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா?!…

Next Story