மகன் பிறந்ததும் இப்படி ஒரு மனக் குமுறலா? பார்க்கக் கூட ஆசைப்படாத நாகேஷ்.. ஏன்னு தெரியுமா?
Actor Nagesh: சினிமாவில் ஹீரோவை ரசித்ததை விட ஒரு காமெடி நடிகரை ரசிகர்கள் ரசித்தார்கள் என்றால் அது நாகேஷை மட்டும்தான். தன் நடிப்பிற்கு என்று தனி இலக்கணம் வகுத்துக் கொண்டவர் நாகேஷ். உடல் மொழியாலும் விதவிதமான முக பாவனைகளாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
எம்ஜிஆர், சிவாஜி , ஜெமினி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என அந்த காலத்தில் இருந்த அனைத்து நடிகர்களின் படங்களில் நாகேஷை பார்க்காமல் நாம் கடந்து விட முடியாது. பட ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படமுழுக்க நாகேஷின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: மூன்று மதங்களை ஒன்றிணைத்த லால் சலாம்!.. வேலூர் ரசிகர்கள் பண்ண தரமான சம்பவம்!..
அந்தளவுக்கு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். காமெடி நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவுமே மக்களை கவர்ந்தவர் நாகேஷ்.
இந்த நிலையில் நாகேஷை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். அதாவது ஒரு சமயம் நாகேஷ் பாலசந்தரின் படப்பிடிப்பில் இருந்த போதுதான் அவருக்கு ஆனந்த்பாபு பிறந்தாராம்.
இதையும் படிங்க: கேமியோ ரோலில் கூட மாஸ் காட்டிய ரஜினிகாந்த் படங்கள்… இத நோட் பண்ணீங்களா?
அந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டவுடன் நாகேஷ் துள்ளிக் குதிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருடைய மகனை பார்க்க கூட போகவில்லையாம். அதற்கு பாலசந்தர் ‘என்ன நாகேஷ்? உனக்கு மகன் பிறந்திருக்கிறான். அந்த சந்தோஷம் துளி கூட உன் முகத்தில் தெரியலயே. போய் பார்க்க கூட இல்லையே’ என கேட்டாராம்.
அதற்கு நாகேஷ் ‘இல்ல. என் முகம் முழுக்க அம்மை தழும்பு இருக்கிறது. இந்த முகத்தோட என் மகனை பார்த்தால் அவன் பயந்து விடுவான்’ என கூறியிருக்கிறார். அதற்கு பாலசந்தர் ‘அழகு என்பது முகத்தோற்றத்தில் இல்லை நாகேஷ். அது உன் நடிப்பில் இருக்கிறது. அந்த அழகான நடிப்பை வைத்துக் கொண்டு இப்படியா பேசுவது? போய் முதலில் உன் மகனை பார்’ என அனுப்பி வைத்தாராம் பாலசந்தர்.
இதையும் படிங்க: தளபதி 69 படம் இப்படித்தான் இருக்கும்!.. அவர் கூட அரசியலில் பயணிக்கவும் ரெடி.. பிரபலம் ஓபன் டாக்!..