கேமியோ ரோலில் கூட மாஸ் காட்டிய ரஜினிகாந்த் படங்கள்... இத நோட் பண்ணீங்களா?

Rajinikanth: மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் லால் சலாம் திரைப்படம் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் ஒரு கேமியோ ரோல் செய்ய இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி ஹீரோவாக மட்டுமல்ல கேமியோ ரோலில் கூட தனக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். பாவத்தின் சம்பளம் படத்தில் தான் முதன்முதலில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் கமல் நடித்த தாயில்லாமல் நானில்லை படத்தில் அடுத்த கேமியோ ரோல் செய்தார்.

இதையும் படிங்க: இதே வேட்டையனா இருந்தா நிலைமையே வேற!.. காத்து வாங்கும் லால் சலாம் டிக்கெட் புக்கிங்!..

1982ம் ஆண்டு வெளிவந்த நன்றி மீண்டும் வருக திரைப்படம். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். கே.பாலசந்தர் இயக்கத்தில் சரிதா நடித்த திரைப்படம் அக்னி சாட்சி.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் கமல்ஹாசனும் இணைந்து கேமியோ செய்து இருப்பார். ரமணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் உருவங்கள் மாறலாம். இப்படத்தில் வொய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடிக்க ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். முக்தா எஸ்.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த கோடை மழை திரைப்படத்திலும் கேமியோ செய்து இருந்தார்.

இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..

கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் திரைப்படம். இப்படத்தில் சுஹாசினி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீதர், விவேக், லலிதா குமாரி நடித்திருந்தனர். ரஜினியுடன் விஜயகாந்தும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்கள். வள்ளி திரைப்படத்தில் லால் சலாம் படம் போன்று நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்திருப்பார்

கே.நட்ராஜ் இயக்கிய இப்படத்தினை ரஜினி கதை, வசனம் எழுதி தயாரித்து இருந்தார். குசேலன் படத்தில் அசோக்குமார் என்ற நடிகராக வந்து இருப்பார். ஆனால் அந்த படத்தில் பசுபதி தான் ஹீரோ என்பதால் இதுவும் கேமியோ கணக்கிலே வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எனக்கு யார் கூடவும் தொடர்பில்லை… சுச்சி லீக்ஸால் என் வாழ்க்கையே போச்சு… கலங்கிய ஹிட் நாயகி…

 

Related Articles

Next Story