தொழில் மேல் எவ்ளோ பக்தி? வின்னர் படத்துக்காக வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த நம்பியார்..
Actor MN Nambiar: உண்மையிலேயே இவர் மிகவும் கெட்டவராக இருப்பாரோ என்ற ஒரு பிம்பத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் பிரபல மூத்த நடிகர் எம் என் நம்பியார் .வில்லன்களுக்கெல்லாம் வில்லன் என்றே சொல்லலாம். தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலங்களில் வில்லன் என்றால் ஒரே வில்லன் தான் அது நம்பியார் மட்டும்தான். இன்றைய காலகட்டத்தில் டாப் நடிகர்களாக இருந்தவர்கள் வில்லன்களாக நடிக்க தொடங்கி விட்டார்கள்.
ஆனால் கதாநாயகர்களுக்கு என இருந்த ஒரே வில்லன் அந்த காலத்தில் நம்பியார் மட்டுமே. இவர் நடித்த முதல் படம் ராமதாஸ். அந்த படத்தில் மந்திரி வேடத்தில் நடித்திருப்பார் .ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் காமெடியனாகத்தான் நடித்தாராம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மோகினி, மாலதி ,வித்யாவதி, அபிமன்யு போன்ற படங்களில் எல்லாம் நம்பியார் காமெடியனாக தான் நடித்திருந்தாராம்.
இதையும் படிங்க: எத்தனை படத்தை ஓகே பண்ணுவீங்க கவின்… லிஸ்ட்டில் இணைந்த ஜில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்…
முதன் முதலில் திகம்பர சாமியார் என்ற படத்தில் தான் நம்பியார் வில்லனாக நடித்திருக்கிறார் .அந்தப் படத்தில் அவர் நடிப்பை அனைவரும் பாராட்ட அதிலிருந்து தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தாராம் நம்பியார். எம்ஜிஆருக்கு ஆஸ்தான நடிகர் என்றால் அது நம்பியார் மட்டுமே. ஒரு மேடையில் ரஜினி எப்படி தனக்கு வில்லன் என்றால் அது ரகுவரன் மட்டுமே என்று சொன்னாரோ. அதேபோல தான் எம்ஜிஆருக்கு வில்லன் என்றால் அது நம்பியார் மட்டுமே.
இந்த நிலையில் நம்பியாரை பற்றி ஒரு சுவாரசிய தகவலை பிரபல தயாரிப்பாளர் முருகன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி காலத்திற்குப் பிறகு நம்பியார் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார் .அப்படி நடித்த படங்களில் மிகவும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது வின்னர் திரைப்படம். அந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து டப்பிங் வேலைகள் மட்டும் பாக்கி இருந்ததாம்.
இதையும் படிங்க: இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க சென்னைக்கு வந்த சூரி! அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
மறுநாள் 6 மணிக்கு நம்பியார் ஊட்டி புறப்பட இருந்தாராம். முதல் நாள் முருகன் அவரிடம் சம்பளத் தொகையாக ஒன்றரை லட்சத்தை கொடுக்க போனாராம். ஆனால் நம்பியார் அதை வாங்க மறுத்து விட்டாராம். காரணம் என்னவெனில் இன்னும் டப்பிங் வேலைகள் முடியவில்லை. நான் நாளை ஊட்டி புறப்படுகிறேன். போனால் திரும்ப வருவதற்கு ஒரு மாத காலமாகும். இப்போது இந்த பணத்தை நான் வாங்கிக் கொண்டால் நம்பியார் பணத்தை வாங்கிக் கொண்டு டப்பிங் பேச வர மறுக்கிறார் என்ற ஒரு தவறான செய்தி பரப்பப்படும்.
நான் நடித்தவரை இந்த மாதிரி சர்ச்சைகளில் எல்லாம் நான் சிக்கியதே இல்லை. அதனால் வாங்க மாட்டேன் என கூறினாராம். அதற்கு முருகன் நீங்கள் சொல்வது சரிதான் சாமி. டப்பிங் முடித்தால் மட்டுமே இந்த படம் ரிலீசுக்கு போகும். அதனால் எப்பொழுது நீங்கள் டப்பிங் பேச முடியும் என கேட்டாராம் .அதற்கு நம்பியார் இன்று மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் நான் கால்ஷீட் தருகிறேன் .இரண்டு மணி நேரத்திற்குள் டப்பிங் முடித்துவிட்டு என்னை அனுப்பிவிடு.
இதையும் படிங்க: அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்கள்!.. சுள்ளான இருந்தும் சுளுக்கெடுத்த தனுஷ்!…
ஆறு மணிக்கு மேல் நான் தூங்கி விடுவேன் என சொல்லி இருக்கிறார். அதற்கு முருகன் இது போதும் சாமி. சரியாக 4 மணிக்கு கார் அனுப்பி விடுகிறேன் என சொல்லிவிட்டு சென்றாராம். மணி 4.30 ஆகிவிட்டது. முருகனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்ததாம். உடனே அவரே காரை எடுத்துக்கொண்டு நம்பியார் வீட்டுக்கு போக அந்த நம்பியார் அவர் வீட்டு வாசலில் வெளியே குடையை பிடித்தவாறு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தாராம் .
அதற்கு முருகன் என்ன சாமி வெளியிலேயே உட்கார்ந்து விட்டீர்கள் என கேட்க நான் உள்ளே போய் இருந்தால் இந்நேரம் தூங்கி இருப்பேன் .அதனால் வெளியிலேயே உட்கார்ந்து இருக்கிறேன். வா புறப்படலாம் என காரில் ஏறி டப்பிங் பேச வந்தாராம் நம்பியார். இப்படி தொழில் மீது எந்த அளவு பக்தி உடைய ஒரு சினிமா நடிகரை நான் பார்த்ததே கிடையாது என முருகன் கூறினார்.