நெப்போலியன் வில்லனாக மிரட்டிய படங்கள்! எஜமானையே ஆட்டிப்படைத்த வல்லவராயனை மறக்க முடியுமா?
Actor Nepolean: தமிழ் சினிமாவில் பொதுவாக வில்லன்களாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக ஜொலித்தவர்கள் ஏராளம். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களை கூறலாம். ஆனால் பின்னாளில் இவர்கள் எல்லாம் எந்த இடத்தை அடைந்தார்கள் என்பது வரலாறு.
இன்று ஒட்டுமொத்த சினிமாவுக்குமே சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினி. இவர்கள் வரிசையில் நடிகர் நெப்போலியன். நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதாவால் பாராட்டப்பெற்றவர் நெப்போலியன். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய படங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க: லைக்காவை கண்டுபிடிச்சி கொடுத்தா சன்மானம்!.. விடாமுயற்சி அப்டேட் கேட்டு அஜித் பேன்ஸ் அடித்த பேனர்..
புது நெல்லு புது நாத்து: நெப்போலியன் அறிமுகமான படம்தான் இது. இந்தப் படத்தில் நெப்போலியன் நடிக்கும் போது அவருக்கு வயது வெறும் 22 தானாம். ஆனால் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் கதாபாத்திரம். அவர்தான் மெயின் வில்லன். முதல் படத்திலேயே யாருப்பா இந்த நடிகர்? என்று கேட்கும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார் நெப்போலியன்.
கேப்டன் மகள்: பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் ராஜா மற்றும் குஷ்பூ ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்திலும் நெப்போலியன் ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். ஒரு அரசியல் பெரும் புள்ளியை அழிக்கும் ராயனாக வந்து அனைவரையும் மிரட்டியிருப்பார் நெப்போலியன்.
இதையும் படிங்க: ஷண்முகி பாண்டிமுகியாகிடும்!.. ரெடின் கிங்ஸ்லி மனைவியை இதுக்கு மேல யாரும் கலாய்க்க முடியாது!..
கிழக்குச் சீமையிலே: பாசமலர் படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை கதையை பெரிய அளவில் கொண்டாடிய திரைப்படமாக அமைந்தது இந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம். இதில் விஜயகுமார் ராதிகா இருவரும் அண்ணன் தங்கையாகவும் ராதிகாவின் கணவராக சிவனாண்டி கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடித்திருப்பார். இதுவும் நெப்போலியனுக்கு ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம்தான்.
எஜமான்: நெப்போலியன் கெரியரிலேயே ஒரு மைல் கல்லை உருவாக்கிய திரைப்படமாக எஜமான் திரைப்படம் அமைந்தது. வல்லவராயனாக ரஜினியை மிரட்டிய ஒரு கொடூர வில்லனாக நடித்திருப்பார். இந்தப் படத்தை பார்த்துதான் நெப்போலியனை திருமணம் செய்ய மாட்டேன் என அவர் மனைவி சொன்னதாக ஒரு பேட்டியில் நெப்போலியனே கூறியிருப்பார்.
இதையும் படிங்க: மூன்று ஜோடிகளையும் பிரிச்சிவிட்டாச்சு.. சிறகடிக்க ஆசை களேபரம்.. குழப்பத்தில் விஜயா!..