Categories: Cinema News latest news tamil cinema gossips

ஷ்ஷ்., சத்தமில்லாமல் அமெரிக்காவில் சாதித்து வரும் நெப்போலியன்.!? பின்னணியில் அந்த சோக நிகழ்வு.!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா மூலம் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் கிராமத்து கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நம் மனதில் நின்றவர் நடிகர் நெப்போலியன்.

இவர் தமிழ் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வப்போது ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும்போதே, ஏன் நெப்போலியன் அமெரிக்காவுக்கு சென்றார் என்ற தகவல் அண்மையில் கசிந்தது.

அதாவது, அவரது மகனுக்கு மருத்துவ சிகிச்சை காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழல் நெப்போலியனுக்கு உருவாகியுள்ளது. அதன் காரணமாக குடும்பத்தில் நெப்போலியன் அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர், தான் இங்கு செய்துவந்த தொழிலை அமெரிக்காவில் செய்ய தொடங்கினார் நெப்போலியன்.

இதையும் படியுங்களேன் – ரெண்டு மகள்களால் மன நிம்மதி போச்சே..! மிகுந்த வருத்தத்தில் நம்ம பிரமாண்டம்.!

பின்னர், அது அமெரிக்காவில் செட்டாகி போக தற்போது அமெரிக்க குடியுரிமை வாங்கி அங்கேயே செட்டில் ஆகி விட்டாராம் நெப்போலியன். அங்கு அவருக்கு சொந்தமாக ஒரு ஐடி கம்பெனி உள்ளதாம். அதில் சுமார் 1,500 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர் என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது.

சொந்தமாக அமெரிக்காவிலும் கம்பெனி உள்ளதால், அங்கேயே தனது குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். நெப்போலியன் அவ்வபோது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் யாரேனும் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே இங்கு வந்து நடித்துவிட்டு செல்கிறார்.

Published by
Manikandan