தொடர் ஃபிளாப் கொடுக்கும் இயக்குனர்...கழட்டி விட்ட வாரிசு நடிகர்...சினிமாவுல இதலாம் சகஜம்...

by சிவா |
jeyam ravi
X

jeyam ravi

சினிமாத்துறையை பொறுத்தவரை வெற்றிகள் மட்டுமே ஒருவரின் நிலையை தீர்மானிக்கும். வெற்றிப்படம் கொடுக்கும் தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரை சுற்றியே சினிமா வியாபாரம் நடக்கும். தொடர் தோல்விகள் கொடுத்தால் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார வேண்டியிருக்கும்.

சினிமாவில் வாய்ப்பு

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் இருப்பார்கள். அதே இயக்குனர் மீண்டும் ஒரு ஹிட் படத்தை இயக்கிவிட்டால் மீண்டும் தயாரிப்பாளர்கள் அவரை தேடி வருவார்கள். முன்னணி நடிகர்களும் அவர்களை தொடர்பு கொண்டு ‘நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்’ என வருவார்கள். அவ்வளவு ஏன்?.. இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி கொடுத்தாலே ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பெல்லாம் கிடைக்கிறது. இதுதான் சினிமா.

mohan

mohan

மோகன் ராஜா

இந்த நிலை தற்போது இயக்குனர் மோகன் ராஜாவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜெயம் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் மோகன் ராஜா. துவக்கத்தில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை ரீமேக் செய்து சில ஹிட்களை கொடுத்தார். சினிமா வட்டாரத்தில் இவரை ரீமேக் பட இயக்குனர் எனவே பேச துவங்கினர்.

thani

thani

ஆனால், தனி ஒருவன் திரைப்படம் மூலம் தன்னால் நேரடி திரைப்படங்களையும் இயக்க முடியும் என நிரூபித்தார். அப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் இயக்குனர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அப்படம் நல்ல வசூலை பெற்றதோடு, தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

velaikaran

velaikaran

சிவகார்த்திகேயன்

எனவே, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார். அவரை வைத்து ‘வேலைக்காரன்’ என்கிற திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்தது. எனவே, அவரின் பக்கம் தயாரிப்பாளர்கள் செல்லவில்லை. மற்ற நடிகர்களும் அவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை.

இதையும் படிங்க: “சிவாஜி படத்திற்கு தடை”… சென்சார் போர்டு எடுத்த அதிரடி முடிவு… என்ன காரணம் தெரியுமா ??

அந்தகன்

ஆனால், நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து எடுக்க நினைத்த ‘அந்தகன்’ திரைப்படத்தை இயக்க மோகன் ராஜாவைத்தான் முதலில் அழைத்தார். ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டார் மோகன் ராஜா. ஆனாலும் பொறுத்துக்கொண்டார் தியாகராஜன். செலவையும் இழுத்து வைத்தார். ஒருகட்டத்தில் கடுப்பான தியாகராஜன் மோகன் ராஜாவை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவரே படத்தை இயக்கி முடித்தார்.

anthagan

anthagan

காட்ஃபாதர்

இருந்தாலும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி தனது ‘காட்பாதர்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை மோகன் ராஜாவுக்கு கொடுத்தார். இது மலையாளத்தில் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும். மோகன் ராஜா இயக்கிய காட் பாதர் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

mohan

mohan

இப்படத்தை மோகன் ராஜா இயக்கிக்கொண்டிருந்த போது அவருக்கு தெலுங்கு பட ஹீரோக்கள் அழைப்பு விடுத்தனர். அதில், நாகார்ஜுனாவின் மகன் அகிலும் ஒருவர். ஆனால், காடபாதர் தோல்விக்கு பின் மோகன் ராஜா போன் போட்டால் நிகில் எடுக்கவே இல்லையாம்.

இதுதான் சினிமா உலகம்...

Next Story