எம்ஜிஆர்...கமல்...சாரெல்லாம் ட்ரை பண்ணியது இப்போ எப்படியோ...ஆண்டவன் புண்ணியத்தால நல்லபடியா முடிஞசுருச்சி..!

by sankaran v |
எம்ஜிஆர்...கமல்...சாரெல்லாம் ட்ரை பண்ணியது இப்போ எப்படியோ...ஆண்டவன் புண்ணியத்தால நல்லபடியா முடிஞசுருச்சி..!
X

nilalgal ravi

கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் நிழல்கள் ரவி. இவரது நடிப்பு எப்போதுமே யதார்த்தமாக இருக்கும். அந்த கம்பீரமான காந்தக்குரலை நாம் பல படங்களில் கேட்டு இருப்போம். அப்புறம் தான் தெரிகிறது....நிழல்கள் ரவி சூப்பர்ஹிட்டாகும் படத்தின் நிழலாக இருந்து டப்பிங் கொடுத்து வெற்றி பெறச் செய்கிறார் என்று...!

நிழல்கள் என்ற படத்தில் அறிமுகமானார். இது மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தனது பெயருக்கு முன்னால் படத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டார். அதிலிருந்து தான் இவருக்கு நிழல்கள் ரவி என்ற பெயர் வந்தது.

தற்போது இவர் நடித்து வரும் படம் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன். இந்தப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு பகிர்கிறார்.

Nizhalgal Ravi

சிறந்த பின்னணிக்குரலுக்குச் சொந்தக்காரராகவும் இருப்பார். இவர் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் கொடுப்பார். சமீபத்தில் கேஜிஎப் படத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். ஆடியன்ஸ் எங்க போனாலும் கேஜிஎப் வாய்ஸ கேட்குறாங்க.

பொன்னியின் செல்வன் 2 பார்ட். ரெண்டுமே முடிஞ்சது. கிராபிக் ஒர்க் போயிக்கிட்டு இருக்கு. ஷெட்ல சூட் பண்ணும்போது ஜாலிலாம் கிடையாது. ரொம்ப டென்ஷனாத் தான் இருந்தது. டயலாக்லாம் சுத்தமான தமிழ்ல இருந்தது. லைவ் எல்லாமே. ப்ராம்;ப்டிங் எல்லாம் கிடையாது. ஐஸ்வர்யா ராய் எல்லாம் அருமையா தமிழ் பேசுறாங்க. காதால கேட்டேன். அழகா கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுனாங்க.

திரிஷா அருமையா தமிழ் பேசுனாங்க. விக்ரம் காலைல ஏழரை மணிக்கு குதிரைல ஏறி உட்கார்ந்துருவாரு. சாயங்காலம் 5 மணிக்குத் தான் இறங்குவாரு. எனக்கு 20 நாள்கள் சூட்டிங் நடந்தது. மத்தியப்பிரதேசத்தில சூட்டிங் பண்ணுனாங்க.

எம்ஜிஆர் சார் ட்ரை பண்ணி, கமல் சார் ட்ரை பண்ணி, இப்போதான் மணிசார் ட்ரை பண்ணி முடியுமோ முடியாதோன்னு நினைச்சி எப்படியோ ஆண்டவன் புண்ணியத்தால நல்லபடியா முடிஞ்சிருச்சி...

Nilalagal ravi in PS-1

பாரதிராஜா சாரோட நிறம் மாறாத பூக்கள் படத்தில் தான் முதல்ல டப்பிங் பேசினேன். உள்ள சவுண்ட் என்ஜினீயர் லோகநாதன் சொன்னாரு...யாருங்க தம்பி மெட்டாலிக் வாய்ஸ்...அது 1979ல சொன்னாங்க.

அதை இப்போ சொல்றாங்க...மெட்டாலிக் வாய்ஸ்னு. இது எதனால அப்படி வந்துச்சுன்னா அந்தக்காலத்துல காலேஜ் ஸ்டேஜ்ல அமிதாப் படம், ராஜேஷ் கண்ணா படம், சிவாஜி சார் படம் இதெல்லாம் நான் பார்த்து மிமிக்ரி பண்ணுவேன்...ஐ திங் வாய்ஸ் ஸ்டரக்சரர் சேஞ்ச்...இதை பண்ணி பண்ணி பண்ணி இப்படி பேச ஆரம்பிச்சேன்.

வாய்ப்பு வந்து கதவத் தட்டும்போது தெரியாது...தெரியும்னு யோசிக்கக்கூடாது. உள்ளே நுழைஞ்சா தான் வி கேன் லேர்ன். களத்தில இறங்குவும்னு ஒரு கை பார்த்துடுவேன்..!

Next Story