Actor NTR: என் டி ராமராவ் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஆந்திராவின் முதல்வராக 7 ஆண்டுகள் பணியாற்றியும் இருக்கிறார். இவருடைய இயற்பெயர் நந்தமுரி தாரக ராமராவ். இன்று தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை எப்படி ஒரு கடவுளாக மாபெரும் தலைவராக நாம் போற்றுகிறோமோ அதே போல தெலுங்கில் இவரை ஒரு கடவுளாக ஒவ்வொரு வீட்டிலும் இவருடைய படங்களை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு இவருடைய பெருமை தெலுங்கு தேசத்தில் ஓங்கி இருக்கின்றது.
இதுவரை ராமரை நாம் நேரில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் ராமர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற ஒரு பிம்பத்தை நம் மனதில் ஆழப் பதித்தவர் என்டி ராமராவ். ராமர் வேடத்தில் அச்சு அசல் ஒரு ராமராகவே வாழ்ந்திருப்பார். அடிப்படையிலயே இவருக்கு நல்ல குரல் வளம் இருந்ததால் இளம் வயதில் அவருடைய பொழுதுபோக்கான நேரங்களில் பாடல்கள் பாடுவதில் வல்லவராகவும் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரீ ரிலீஸுக்கும் எண்ட் கார்ட் போட்ட அஜித் ரசிகர்கள்! அடுத்த ‘தல’ அறிவிப்பு இதுவாகத்தான் இருக்கும்
நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் கல்லூரி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டாராம் ராமாராவ். லவகுசா, மாயாபஜார் போன்ற புராண படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். கிருஷ்ண வேடம் என்றாலே என்டி ராமராவ் தான் என்ற நிலை திரையுலகில் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ராமர், கிருஷ்ணனாகவே என்டிஆர் பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆன சித்ரா லட்சுமணன் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். தமிழில் ஜெமினி நடிப்பில் ராமு என்ற திரைப்படம் வெளியாகி அபார வெற்றி பெற்றது. அதை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்தது. அதை தெலுங்கிலும் எடுக்க ஏவிஎம் நிறுவனம் முயற்சித்தது. தெலுங்கு பதிப்பில் என்டி ராமராவை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: படத்துலதான் உங்க சித்தாந்தமா? நிஜவாழ்க்கையில்? ‘ஜெய்பீம்’ ரியல் பார்வதியின் தற்போதைய நிலைமை
சம்பள விஷயம் பற்றி பேசுவதற்காக தங்களை உடனடியாக பார்க்க வேண்டும் என ஏவிஎம் சகோதரர்களே என்டிஆர் இடம் கேட்க மறுநாள் காலை 4:30 மணியளவில் வந்து பார்க்குமாறு சொல்லி இருக்கிறார். என்னது காலை 4:30மணிக்கா? என மிகவும் ஆச்சரியத்தோடு இருந்த ஏவிஎம் சகோதரர்கள் அவர் சொன்ன நேரத்திற்கே போய் பார்த்தார்களாம்.
அந்த நேரத்திலும் என்டிஆர் அன்று நடக்க இருந்த படப்பிடிப்பிற்காக முழு மேக்கப் உடன் செட்டில் தயாராகி இருந்தாராம். சம்பள விஷயத்தை பற்றி பேசும்போது இந்த படத்திற்கு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும். என் முந்தைய இரு படங்கள் சரியாக ஓடாததால் பத்தாயிரம் ரூபாய் குறைத்துக்கொண்டு 90 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுங்கள் என கேட்டாராம்.
இதையும் படிங்க: நோ.. நெவர்!.. செத்தாலும் அது மட்டும் நடக்கக் கூடாது!.. கறாராக இருந்து சாதித்து காட்டிய ரஜினி!..
இதைப்பற்றி கூறிய சித்ரா லட்சுமணன் இன்றைய காலகட்ட நடிகர்கள் ஒரு படம் வெற்றி பெற்றால் தன் சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தியும் முந்தைய படங்கள் தோல்வி அடைந்தால் 50% உயர்த்தியும் கேட்கின்றனர். ஆனால் என் டி ஆர் தன் முந்தைய படம் ஓடாததால் பத்தாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டிருக்கிறார். இது போல் ஒரு மனப்பான்மை எந்த நடிகருக்கு வரும் என கூறினார்.
