திரைத்துறையில் எல்லா நடிகர்களுக்கும் தொல்லையாக இருந்த ஒரே பிரபலம்!...உண்மையை போட்டுடைத்த பாண்டியராஜ்..
தமிழ் சினிமாவில் என்னால் எதுமே முடியாது என்று சொல்கிறவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர் நடிகர் பாண்டியராஜன். தோற்றத்திலும் சரி, அழகிலும் சரி மற்றவர்களுக்கு கேளிக்கை பொருளாக இருக்கும் நிலையிலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று திரைப்பிரபலங்களே போற்றும் வகையில் வளர்ந்து நிற்கிறார் பாண்டியராஜன்.
ஆரம்பத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக சேர்ந்து இயக்குனர் அதன் பின் நடிகர் என படிப்படியாக உயர்ந்தார். முதலில் இயக்கிய படம் ரேவதி நடிப்பில் வெளிவந்த கன்னிராசி படம் ஆகும். முதன் முதலாக அறிமுகமான படம் ஆண்பாவம். நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார் பாண்டியராஜன்.
இதையும் படிங்கள் : உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம்…சூப்பர்ஸ்டாரிடமே கறார் காட்டிய நிறுவனம்
மேலும் அவர் கூறும் போது இன்றைய தலைமுறைகள் எல்லாம் நல்ல நெருக்கத்துடன் பழக வேண்டும், பழசை மறக்காமல் இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும் அவர் கூறியது தான் சுவாரஸ்யமாக இருந்தது. தமிழ் சினிமாவில் போற்றத்தக்க வகையில் வலம் வந்த மற்றுமொரு நடிகர் சிவக்குமார்.
இவரிடம் இருக்கும் குணங்களை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். மேலும் இலக்கியத்தை கரைத்துக் குடித்தவர். அந்த காலங்களில் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இவரால் தான் திட்டு விழுமாம் . அதாவது பாண்டியராஜன் வீட்டிலயும் ”பாரு, சிவக்குமார, எப்படி பட்ட நடிகன், எப்பேற்பட்ட குணம் “ என்று இவரை ஒப்பிட்டு மற்ற நடிகர்களை அவரவர் வீட்டில் பேசுவார்களாம். இதை குறிப்பிட்டு சொன்ன பாண்டியராஜன் என் அறிவுரை அவருக்கு பொருந்தாது, அவர் அறிவுரை எனக்கு பொருந்தாது. ஒருவர் மற்றொருவரின் மாறி தான் இருப்பார்கள் எனவும் கூறினார்.