உள்ளூர்ல வேணுனா அம்பானியா இருக்கலாம்! வெளியூர்ல.. ரஜினியை வம்புக்கிழுத்த பார்த்திபன்
Actor Rajini: தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மராட்டியராக இருந்து கர்நாடகாவில் நடத்துனராக வேலை பார்த்து சென்னை ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து இன்று தமிழ்நாட்டையே தன் வசம் வைத்திருக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்திய சினிமாவின் ஒரு ஐகானாகவும் வலம் வருகிறார். 73 வயதை எட்டியும் இன்னும் இளம் தலைமுறை நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அதிலும் முதலிடத்தில்தான் இருக்கிறார். எப்படி ஒரு எம்ஜிஆர் ஒரு சிவாஜியோ அதே போல்தான் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் இருக்க முடியும் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடுத்த படத்தின் இயக்குனரை லாக் செய்த விஜய்?!… அட அவரா?!.. எதிர்பார்க்கவே இல்லையே!…
இந்த இடத்திற்கு ரஜினி வர அவர் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் ஏராளம். அதையெல்லாம் ஒரு பாடமாக வைத்தே எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் பார்த்திபனின் டீன்ஸ் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய பார்த்திபன் தான் அணிந்திருந்த சட்டையை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் வடிவமைத்திருந்தார். இந்த சட்டையை கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக தைத்து வைத்திருந்தாராம். ஆனால் சில மேடைகளில் வாய்ப்பு கிடைக்காது. உள்ளுரில் பெரிய ஆளாக இருந்திருப்போம். ஆனால் வெளியூரில் அங்கு முதலிடம் கிடைக்கிறதே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
இதையும் படிங்க: த்ரிஷாவை கூட்டிட்டு வந்து அது இல்லைனா எப்படி? வேஸ்ட் லைஃபா போன தக் லைஃப்..
அதே மாதிரியான மேடைதான் கலைஞர் நூற்றாண்டு விழா மேடையும் அமைந்தது. அதனால் நேரம் கருதி சீக்கிரமாக முடிக்க வேண்டியிருந்ததால் அங்கு பேசக்கூடிய வாய்ப்பு பார்த்திபனுக்கு கிடைக்கவில்லையாம். அதனால்தான் அதே சட்டையை இன்று இந்த விழாவிற்காக அணிந்து வந்ததாக கூறினார். இது எனக்கு மட்டும் இல்லை. பெரிய பெரிய ஸ்டார்களுக்கும் அப்படியான நிலைமைதான் அமையும்.
வேறொரு இடத்திற்கு சென்று அங்கு முதலிடம் கிடைக்குமா என்பதிலேயே பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று சொல்லி நான் சொல்வது சில பேருக்கு புரியும் என நம்புகிறேன் என புன்னகைத்தார். இது நிச்சயமாக ரஜினியைத்தான் சொல்லியிருக்கிறார் என தெரிந்துவிட்டது. எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி அயோத்தியில் அவருக்கு முன் இருக்கை அந்தஸ்து கிடைக்காதது நெட்டிசன்களுக்கு மீம்ஸ் போட வசதியாக போனது. இதை குறிப்பிட்டுத்தான் பார்த்திபன் பேசினார்.
இதையும் படிங்க: லோ பட்ஜெட் படமா? அதுவும் நானா? கனா இயக்குனருக்கு நடந்த விபரீதம்.. அன்னபூரணி என்னம்மா நீங்க?