அப்பாவிடம் இருந்து நான் கத்துக்கிட்ட முதல் பாடம்... பார்த்திபன் சொன்ன 'நச்' தகவல்

by sankaran v |   ( Updated:2025-03-23 05:59:45  )
parthiban
X

parthiban

நடிகர் பார்த்திபன் திரையுலகில் அவருடைய குருநாதரான பாக்கியராஜிடம் இருந்து வந்தவர். வந்ததும் அவர் திரையுலகில் 'புதிய பாதை' போட்டு அழுத்தமாகக் காலடி தடம் பதித்தார். அந்த வகையில் முதல் படத்தில் இருந்தே அவரது நக்கலும் நய்யாண்டியும் கலந்த பேச்சு ரசிகர்களுக்குப் பழகி விட்டது. படத்துக்குப் படம் அவருடைய புதிய பாணியிலான நடிப்பு அவருடைய படங்களை ரசிக்க வைத்தது.

அவர் இயக்கிய பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகின. படங்களின் கதை மட்டும் அல்லாமல் டைட்டிலிலும் வித்தியாசம் காட்டினார். அவரது ஹவுஸ்புல் படம் ஒரு மைல் கல்லாக இருந்தது. ஒத்த செருப்பு, இரவின் நிழல், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் படங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தன.

படங்களில் நடிப்பது, இயக்குவதோடு நிறுத்தாமல் கவிதைகளையும் அவ்வப்போது எழுதுவார். அவர்தம் கவிதைத் தொகுப்புக்கு 'கிறுக்கல்கள்' என்று பெயரிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில் பார்த்திபன் தனது கடந்த கால அனுபவங்களை பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

actor parthiban

actor parthiban

என் அப்பா ஒரு நாளைக்கு 10 பாக்கெட் சிகரெட் பிடிப்பார். அதனால் இதுவரை நான் சிகரெட்டை பிடித்ததே இல்லை. அப்பாவிடம் இருந்து முதலில் கற்றுக் கொண்டது இதுபோல இருக்கக்கூடாது என்பதுதான். குடும்பத்தில் இருந்த வறுமை காரணமாக எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. இதனால் மற்ற குழந்தைகளைப் போல நான் எப்போதும் விளையாடியது இல்லை.

அவ்வளவு ஏன் சைட் அடிச்சது கூட இல்லை. சைட் அடிக்க எனக்கு தகுதி இல்லை என்று நினைத்து எப்போதுமே தலைகுனிந்து கொண்டுதான் செல்வேன். அப்போதுமே, ஒரு சில காதல் என்னை கடந்து சென்றது. என் இளமை காலத்தில் வந்த பல காதலை நான் மிஸ் செய்ததற்கான காரணம் என் குடும்பத்தில் இருந்த வறுமைதான் என்கிறார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

Next Story