ப்ளாஷ்பேக்: விடிஞ்சா கல்யாணம்… கைல காசு இல்ல… ஷாக் கொடுத்த விஜயகாந்த்.! பொன்னம்பலம் நெகிழ்ச்சி..!

ponnambalam, vijayakanth
Vijayakanth: தமிழ்த்திரை உலகில் உள்ள திரைக்கலைஞர்கள் எத்தனையோ பேருக்கு மறைந்த கேப்டன் விஜயகாந்த் பல உதவிகளை எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் செய்துள்ளார். அவை எல்லாம் இப்போது தான் ஒவ்வொன்றாக வெளியே தெரிய வந்துள்ளது. சக கலைஞர் ஒருவர் கஷ்டப்படுறாருன்னா அவரு கேட்காமலேயே உதவி செய்யக்கூடியவர் தான் விஜயகாந்த்.
அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கும் அப்பவே அவரது திருமணத்தையொட்டி அவர் பணம் இல்லாமல் கையைப் பிசைந்து கொண்டு இருந்த போது உதவி செய்துள்ளார் விஜயகாந்த். நாளைக்கு கல்யாணம்னா இன்னைக்கு ஃபுல் நைட்டும் விஜயகாந்துடன் படத்துக்காக பைட் சீன்ல நடித்துள்ளார் பொன்னம்பலம். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை அவரே சொல்லக் கேட்கலாம்.
பரதன் பட சூட்டிங். பைட் சீன். விஜயகாந்த் சாருக்கும், எனக்கும் விடிய விடிய சூட் போயிட்டு இருக்கு. காலையில 3 மணிக்கு ஷூட் முடிஞ்சது. ரெண்டு பேரும் செம டயர்டு ஆகிட்டோம். பைட் முடிஞ்சி எனக்கு கல்யாணம்.
காலை 6 மணில இருந்து 7.30 மணிக்குள் முகூர்த்தம். சம்பளம் தேவைப்படுது. கம்பெனியில கேட்டுட்டு இருக்கேன். ஆனா கொடுக்கல. வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு 7 மணிக்கு மண்டபத்துக்கு வரேன். பார்த்தா எனக்கு முன்னாடியே சார் வந்து உட்கார்ந்துட்டு இருக்காரு. நான் ஷாக் ஆகிட்டேன்.

அவர் வீட்டு கல்யாணம் மாதிரி முன்ன நின்னு பண்ணி ஆசிர்வாதம் பண்ணிட்டு கல்யாண செலவு எவ்ளோ ஆகுதுன்னு சொல்லு தரேன்னு சொல்லிட்டு, கைல 2.30லட்சம் கொடுத்துட்டுப் போனாரு என்கிறார் நடிகர் பொன்னம்பலம்.
1992ல் சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஆக்ஷன் படம் பரதன். இவருடன் இணைந்து பானுப்ரியா, எஸ்பி.பி., ஆனந்தராஜ், சந்திரசேகர், பொன்னம்பலம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் பாடல் மற்றும் பைட் ரெண்டுமே சூப்பர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.