Connect with us

Cinema History

பாரபட்சமின்றி பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபு

எளிமை, அழகு, நட்பு, பாசம் என அனைத்து வகையான நடிப்புகளிலும் மிளிர்ந்து தந்தையைப் போலவே பல தரப்பு ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றவர் இவர் என்று சொன்னால் மிகையில்லை.

இளையதிலகம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் பிரபு. தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்ற நடிகர் இவர். கன்னத்தில் குழி விழும் அழகுடன் இவரின் சிரிப்பைப் பார்க்கும்போது ரொம்பவே கியூட்டாக இருக்கும். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் இளையமகன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

தந்தையுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தாயாரின் பெயர் கமலா. இவரது சகோதரரின் பெயர் ராம்குமார். இவரும் சினிமா தயாரிப்பாளர் தான். சாந்தி, தேன்மொழி என இரு சகோதரிகளும் உள்ளனர்.

1981ல் புனிதாவை திருமணம் செய்து கொண்டார். விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விக்ரம்பிரபு தற்போது முன்னணி கதாநாயகன் வரிசையில் தமிழ்ப்படங்களில்; நடித்து வருகிறார்.

prabhu and vikram prabhu

கமல், ரஜினிகாந்த், கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்கள் நடித்த காலகட்டத்தில் பிரபுவும் அவர்களுக்கு இணையாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

1982ல் இவர் நடித்த சங்கிலி படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. காமெடி படங்களிலும் நடித்து கலக்கியிருக்கிறார்.

1991ல் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குரு சிஷ்யன், சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இணைந்து வெற்றி விழா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் நடித்து கலக்கினார்.

Prabhu

அஜீத்துடன் இவர் இணைந்து நடித்த பில்லா படம் இவருக்கு இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் பெயர் வாங்கிக் கொடுத்தது. அசல் படத்திலும் தல அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார். சிலம்பாட்டம், அயன், ராவணா, மாஞ்சா வேலு ஆகிய படங்களில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சந்திரமுகி படத்தில் இவர் பேசிய என்ன கொடுமை சரவணன் இது என்ற வசனம் அப்போதைய ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட்டாக அமைந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழித்திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்தம்பி, டூயட், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் ஆகிய படங்களில் இவருடைய நடிப்பைப் பார்த்து ரசிக்கலாம்.

கார்த்திக்குடன் இவர் இணைந்து நடித்த அக்னி நட்சத்திரம் படத்தை இப்போது பார்த்தாலும் மாஸாக இருக்கும். இவர் ஏற்கனவே கார்த்திக்குடன் இணைந்து நடித்த உரிமை கீதம் படமும் சிறந்த படம் தான்.

தனுஷ_டன் இணைந்து 3 படத்தில் நடித்துள்ளார். விஜயுடன் இணைந்து தெறி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மரைக்கார் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து அயன் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

prabhu and sivajiganesan

இவரது பழைய படங்கள் என்று சொல்லப்போனால் கன்னிராசி, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கோழிகூவுது, கைராசிக்காரன், தராசு, பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள், உத்தமபுருஷன், நாளைய மனிதன், நினைவுச்சின்னம் ஆகிய படங்கள் செம ஹிட் ஆனவை.

தந்தை சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த சங்கிலி, நீதிபதி, நீதியின் நிழல், மேதைகள், வெள்ளை ரோஜா, சந்திப்பு, திருப்பம், சிம்ம சொப்பனம் மிருதங்க சக்கரவர்த்தி ஆகிய படங்கள் சூப்பர் ஆனவை.

சத்யராஜூடன் இவர் இணைந்து நடித்த பாலைவன ரோஜாக்கள், சின்னத்தம்பி பெரிய தம்பி படங்கள் அப்போது 100 நாள்களைத் தாண்டி ஓடியவை.

google news
Continue Reading

More in Cinema History

To Top