உடம்பு இளைக்க பிரபு செஞ்ச வேலை!..செமயா கலாய்த்த சிவாஜி...சுவாரஸ்ய தகவல்...
இளைய திலகம் என்று அனைவராலும் அன்போடும் அழைக்கப்படும் நடிகர் பிரபு. பிரபு கணேசன் என்ற பெயரை சினிமாவிற்காக பிரபு என்றே சுருக்கிக் கொண்டார். சங்கில் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் பிரபு. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்தார் நடித்தும் வருகிறார்.
கதாநாயகனாக ஏகப்பட்ட படங்களில் நடித்த பிரபு அவர் நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் தமிழ் நாட்டின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார். வெகுளித்தனமான தன் நடிப்பால் சின்னத்தம்பி படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். குணச்சித்திர வேடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : ஜெய்சங்கருடன் கிசுகிசுக்கப்பட்ட நடன நடிகை!..எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?..
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கூட பெரிய வேளார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் குதிரையின் மீது கம்பீரமாக வரும் காட்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தியிருந்தது. பிரபுவிற்கு ஏற்கெனவே குதிரையில் ரைடு போவது மிகவும் பிடித்தமான ஒன்றாம். அடிக்கடி ஏறி ஒரு ரைடு வருவாராம்.
அதன் காரணம் என்னவெனில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிரபுவின் உடல் எடை அதிகரிக்க தொடங்கி விட்டது. ஆகவே உடல் எடையை குறைப்பதற்காக குதிரை ரைடு பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் பிரபு. ஒரு சமயம் சிவாஜி வீட்டில் இருக்கும் போது சிவாஜியின் நண்பர் சிவாஜியை பார்க்க வந்திருக்கிறார். வந்தவர் ‘ஆமால் பிரபு குதிரை ரைடு செல்கிறாரே? ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா? உடம் மெலிகிறாரா?’ என்று கேட்டாராம். அதற்கு சிவாஜி ‘எங்க மெலியுறான், அவனுக்கு பதில் குதிரை தான் மெலிஞ்சு கொண்டே போகிறது’ என்று நக்கலாக பதிலளித்தாராம் சிவாஜி. இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.