உலக நாயகனால் சிறைக்குச் சென்ற பிரபல வில்லன் நடிகர்… இப்படி பண்ணிட்டீங்களே ஆண்டவரே!!

Published on: December 28, 2022
Kamal Haasan
---Advertisement---

கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து மயங்கிப்போகாத ரசிகர்களே இல்லை என சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்லாது தனது சக நடிகர்களையும் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் கட்டிப்போட்டவர் கமல்ஹாசன். அவ்வாறு தனது நடிப்பு ஆற்றலால் பிரபல வில்லன் நடிகர் ஒருவரை போலீஸில் பிடிபடவைத்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா??

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜெயபிரதா, சரத்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சாகர சங்கமம்”. இத்திரைப்படம் தமிழில் “சலங்கை ஒலி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு இது போன்ற அறிமுகமெல்லாம் தேவையில்லை என்று கூட சொல்லலாம்.

Sagara Sangamam
Sagara Sangamam

அந்த அளவுக்கு தென்னிந்தியாவை கலக்கிய சினிமாக்களில் ஒன்றாக “சாகர சங்கமம்” திகழ்ந்தது. இத்திரைப்படத்தில் பாலு என்ற நடனக் கலைஞனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். பரதநாட்டியக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்று கூட சொல்லலாம். குறிப்பாக தனது சிறப்பான நடன ஆற்றலால் பார்வையாளர்களை அசரவைத்தார் கமல்ஹாசன்.

இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கண்ணீர் வடிக்காத பார்வையாளர்களே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களின் மனதை தொடும் அளவிற்கு இத்திரைப்படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

Sagara Sangamam
Sagara Sangamam

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, கர்நாடகாவின் நாடகத்துறையில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் “சாகர சங்கமம்” திரைப்படம் வெளியானதாம். அந்த படத்தை 16 முறை பார்த்தாராம் பிரகாஷ் ராஜ்.

“சாகர சங்கமம்” திரைப்படத்தில் கமல்ஹாசன், தான் இடம்பெற்ற நடன அரங்கேற்றத்திற்கான அழைப்பிதழை கதாநாயகி அவரது கையில் கொடுக்கும்போது ஆனந்த கண்ணீர் வடிப்பார். இந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் பார்ப்பதற்காக தங்களை இலவசமாக அனுமதிக்கவேண்டும் என பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பலரும் திரையரங்கின் உரிமையாளரிடம் பேசி வைத்திருந்தனராம்.

இதையும் படிங்க: ஸ்டூடியோவிற்குள் சூரியன் போல் நுழைந்த சூப்பர் ஸ்டார்??… முதல் சந்திப்பிலேயே சரோஜா தேவியை மயக்கத்தில் ஆழ்த்திய ஹீரோ…

Prakash Raj
Prakash Raj

அதன்படி தினமும் அந்த காட்சியை பார்ப்பதற்காக மட்டுமே முந்தியடித்து ஓடுவார்களாம். அந்த நாட்களில் பெங்களூரில் புது சட்டம் ஒன்று போடப்பட்டதாம். அதாவது பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு ஜீப்ரா கிராஸிங்கை பயன்படுத்த வேண்டும் என விதிமுறை போடப்பட்டிருந்ததாம். ஆனால் கமல்ஹாசனை பார்க்கும் ஆர்வத்தில் பிரகாஷ் ராஜ்ஜும் அவரது நண்பர்களும் அந்த விதிமுறையை பின்பற்றவில்லையாம். ஆதலால் பிரகாஷ் உட்பட பலரையும் கைது செய்து வேனில் ஏற்றி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுவிட்டனராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.