திருச்சிற்றம்பலம் பட விழாவில் பிரகாஷ்ராஜ் சொன்ன சுவாரஸ்யமான குட்டி கதை
தனுஷ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். ஜவஹர் இயக்கத்தில் நித்யா மேனன், ராஷிகன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். குடும்பத்துடன் காண வேண்டிய படமாக உள்ளது.
திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய வார்த்தைகளில் இருந்து ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
இந்தப்படம் அற்புதமான எக்ஸ்பிரீயன்ஸ். பாரதிராஜா வோட டைரக்ஷன்ல நடிக்கலாம்னு இருந்தேன். நிறைய பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப அழகான விஷயமா இருந்தா காரைக்குடியிலயோ எங்கேயோ சூட் பண்ணிக்கிட்டு இருப்போம். சூட்டிங் முடிஞ்ச பிறகு அப்பா அப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருந்தாருன்னா முதல்மரியாதை பாடலைப் போடுறது.
இவரு கண்ண மூடிக்கிட்டு அப்படியே ரசிச்சிக்கிட்டு அந்த ஷாட்ஸல்லாம் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கும்போது
அதை என் லைப்ல வந்து அப்படி ஒரு சூட்டிங் போயி ஒரு வேலைன்னு போறது வேற. அதை முடிச்சிட்டு வந்தபின் இப்படி ஒரு லெஜண்ட் டோட உட்கார்ந்து அவரோட அந்த இதைப் பார்க்கும்போது என்ஜாய் பண்ணும்போது ரொம்ப ரொம்ப பியூட்டிபுல்லா இருந்துச்சு. மறக்கமுடியாத ஒரு வினாடி. ஆனா அந்த வினாடிய உருவாக்குனா அதுக்கு ஒரு இடம் கொடுத்த தனுஷ். ஐ லவ் யூ பார் தேட்.
அவர் ஒரு ஆம்பியஷன கிரியேட் பண்ணுவாரு. அடுத்து ராஷிகன்னா. ஐ எம் வெரி ஹேப்பி வித் யு. எங்கேயோ ஒரு மலையாளப்படத்துல குலுமனாலில சூட் பண்ணிக்கிட்டு இருப்பேன் அவங்களோட. திடீரென முந்தானத்து ஒரு தெலுங்கு படம் பண்ணிட்டு இருந்தோம்.
இன்னைக்கு ஒரு தமிழ்ப்படம் பண்றோம். வேற வேற படங்கள் பண்றதும், டிபரண்ட் டிபரண்ட் கேரக்டர்ஸ் பண்றதும் ஐ ரியலி லவ். இங்கே ஒரு ராட்சஷி இருக்கு. நித்யா மேனன். இந்தக்கதையை தனுஷ் இவங்கக்கிட்டல்லாம் கேட்டவுடனே இந்தக் கேரக்டர் யாருன்னு கேட்டேன். அதான் சார் நித்யாவ கேட்டுக்கிட்டு இருக்கேன்னாரு. அந்த ராட்சஷி தான் வேணும்னு சொன்னேன். ஐ விஷ் யு ஆல் த பெஸ்ட்.
அடுத்து தனுஷ்...எல்லாரும் சொல்றாங்க... முதல்ல உங்களுக்குத் தெரியுமா இவர் திறமை சாலின்னு....எனக்குத் தெரியாது. அது பிறக்கும்போது வந்தது இல்ல. ஒரு நடிகன் நாங்க எப்பவும் சொல்றோம்...வாழ்க்கையில 10...15 படங்கள் பண்ணதுக்கு அப்புறம் அழகாகணும்.
ஏன்னா அந்த வாய்ப்பு கலைஞனுக்கு மட்டும் தான் இருக்கு. செல்வராகவன், அவரது பெற்றோர் எல்லோரும் தான் அவரது வெற்றிக்குக் காரணம். ஒரு சிலை சும்மா சிலை ஆகாது. அதுக்கு ஒண்ணு சொல்வாங்க. கர்ப்பக்குடில ஒரு சிலை இருக்கும். ஒரு படிக்கட்டு இருக்கும்.
அந்த சாமி தூங்கும்போது அந்த படிக்கட்டு கேட்டுச்சாம். ஏன்யா என்னை மட்டும் மிதிக்கிறாங்க...உன்னை மட்டும் கும்பிடுறாங்கன்னு...டேய் அந்த சிற்பி ரெண்டு அடி அடிச்சா நீ படிக்கட்டா ஆயிடுவ...ஆனா...நான் மூக்குக்கு 3000 அடி...கண்ணுக்கு 4000 அடி...உதட்டுக்கு 6000 அடி வாங்குனேன். அது தான் தனுஷ்...அந்த நிலை இன்னும் வளரும்போது இன்னும் பல தொடுவானங்களைத் தனுஷ் தொடுவார்.