இனிமே சோலோ வேலைக்கு ஆவாது! விஜயிடம் சரணடைந்த போட்டி நடிகர் - களைகட்டும் ‘தளபதி68’
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தப் படியாக கோலிவுட்டை கலக்கி வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். ரஜினி ,கமல் கட்டிய கோட்டையை விஜய் ,அஜித் இருவரும் காத்து வருகிறார்கள். இன்று இந்த நால்வரும் தான் சினிமாவில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
அதுவும் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே இந்த போட்டி மேலும் பலப்படுத்தப் பட்டிருக்கிறது. அண்ணாத்த, தர்பார் போன்ற படங்களில் விட்டதை ஜெய்லர் படத்தின் மூலம் பிடித்திருக்கிறார் ரஜினி. அதைப் போல விஜய் லியோ படத்தை நம்பி காத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தின் வேலையிலும் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க : சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஹைகிளாஸ் அழகை காட்டி இழுக்கும் ஜெயிலர் பட நடிகை!..
தளபதி 68 படத்திற்காக தற்போது விஜய் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். ஏற்கனவே தளபதி 68 படத்தில் மாதவன், பிரபுதேவா, சிம்ரன், சினேகா போன்ற பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டு வருகிறது.
இப்போது இதில் புதியதாக இன்னொரு நடிகரும் உள்ளே நுழைந்திருக்கிறார். அதுவும் 90களில் விஜய் , அஜித் இருவருக்கும் டஃப் கொடுத்த நடிகர் பிரசாந்த் தான் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது சம்பந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : எங்களுக்கு முதல்ல பணம் கொடுங்க!. அப்புறம் உதவி பண்ணலாம்!.. விஜயை கலாய்க்கும் தயாரிப்பாளர்…
90களில் விஜய் , அஜித்தை விட அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக பிரசாந்த் திகழ்ந்து வந்தார். இப்போது இந்தப் படத்தில் அவரின் பெயர் அடிபடுவது ரசிகர்களுக்கு ஒரு இன்பதிர்ச்சியாக இருக்கின்றது. மேலும் பிரசாந்த் நீண்ட இடைவேளிக்கு பிறகு அவரின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெளியீட்டிற்காகத்தான் பிரசாந்த் காத்துக் கொண்டிருக்கிறார்.