எங்களுக்கு முதல்ல பணம் கொடுங்க!. அப்புறம் உதவி பண்ணலாம்!.. விஜயை கலாய்க்கும் தயாரிப்பாளர்...

Actor VijayDevarakonda: தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்த இவர் ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அரசியல் சார்ந்த கதையை மையப்படுத்திய கதையாக இப்படம் இருந்தது. இப்படத்தில் நாசர். எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..

இவர் தற்போது முன்னணி நடிகையான சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனரான சிவா நிர்வானா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தினை நவின் எர்னெனி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகி வெற்றி நடையும் போடுகிறது. தற்போது இப்படத்தின் வெற்றியை கண்டு இப்படத்தின் நடிகரான விஜய் தேவரகொண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதன்படி இவர் இப்படத்தில் வாங்கும் சம்பளத்தில் ரூபாய் 1 கோடியை எழை மக்கள் 100 பேருக்கு உதவி தொகையாக கொடுக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க: பெரிய மனச பெரிய இடத்துல மட்டும் காட்டினா போதாது.. விஜய் மீது காண்டான தயாரிப்பாளர்…

இச்செயல் சினிமா துறையில் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியாகும் படங்கள் வெற்றி நடை போட்டால் அப்படத்தில் நடித்த நடிகர், இயக்குனருக்கு தயாரிப்பாளர் பரிசளித்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவின் இச்செயல் இவரின் நல்ல மனதை அறிய வைக்கிறது. இவரின் இச்செயலை புகழ்ந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் இவருக்கு மற்றொரு நெருக்கடியும் வந்துள்ளது.

twitt

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான படம் வேர்ல்டு பேமஸ் லவ்வர். இப்படத்தினை கிரியேட்டிவ் கமெர்ஷியல் நிறுவனம் தயாரித்தது மற்றும் இப்படத்தினை இயக்குனர் க்ராந்தி மாதவ் இயக்கினார். இப்படம் மிகபெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இப்படத்தினால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டமும் ஏற்பட்டது.

இதையும் வாசிங்க: நல்லவேளை விஜய்சேதுபதி நடிக்கல!.. இல்லைன்னா இந்நேரம் சர்ச்சை வெடிச்சிருக்கும்.. 800 ட்ரெய்லர் ரிலீஸ்!..

தற்போது இவர் ஏழைகளுக்கு உதவுவதை கேள்விபட்ட வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தின் தயாரிப்பாளர் விஜய்யால் நாங்கள் அடைந்த நஷ்டம் அதிகம். இவர் இவ்வாறு உதவி செய்வதற்கு பதில் அப்பணத்தினை எங்களுக்கு தரலாமே என கூறியுள்ளார். ஆனால் விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அப்பட நஷ்டத்திற்காக குறிப்பிட்ட தொகையை அந்நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னப்பா நல்லது பண்ணினா கூட இப்படி வறீங்க..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it