பாக்கத்தான் காமெடி பீஸு! ஆனால் பாட்ட கேட்டீங்கனா? பிரேம்ஜி குரலில் தெறிக்கவிட்ட பாடல்கள்

by Rohini |   ( Updated:2024-03-10 10:55:07  )
premji
X

premji

Actor Premji: திரை வாரிசான பிரேம்ஜி நடிகராக பாடகராக இசையமைப்பாளராக என பன்முகத்திறமைகள் கொண்ட ஒரு கலைஞன். கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி வல்லவன் திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராகவும் நண்பர்கள் கேங்கில் ஒரு ஆளாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் பல இளம் இசையமைப்பாளர்களுடன் சேர்ந்தும் பணியாற்றிய பிரேம்ஜி யுவன் சங்கர் இசையில்தான் அதிக பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் எல்லா படங்களிலும் பிரேம்ஜியை பார்க்கலாம். இந்த நிலையில் காமெடியாகவே பார்த்த பிரேம்ஜியின் குரலில் இவ்வளவு அழகான அனல் தெறிக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறதா என ஆச்சரியப்படும் வகையில் அந்த பாடல்கள் எல்லாம் என்ன என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: பிடிக்கலனா போங்க! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணி காட்டுறேன்.. கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குனர்!

ஆர்யாவின் கெரியரிலேயே மிகவும் ஹிட்டான பாடல் என்றால் பட்டியல் படத்தில் அமைந்த தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என்ற பாடல்தான். இந்தப் பாடலை பிரேம்ஜிதான் பாடியிருக்கிறார். அதே போல் சென்னை 28 படத்தில் ஜல்சா பண்ணுங்கடா பாடலையும் அவர்தான் பாடியிருக்கிறார்.

தீனா இசையில் வெளியான திருப்பாச்சி படத்திலும் ஓ மை கடவுளே என்ற பாடலும் பிரேம்ஜியின் குரல் வழியே வந்த பாடல்தான். இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடலாகும். ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சத்யம் படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் படத்தில் பிரேம்ஜி நயனுக்கு நண்பராகவும் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம்!.. பாடலில் பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!..

அஜித்துக்கு பெரிய கம்பேக் கொடுத்த மங்காத்தா படத்திலும் இது அம்பானி பரம்பரை என்ற பாடலையும் பிரேம்ஜிதான் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் அஜித் இறங்கி வந்து ஆடியிருப்பார். மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி படத்தில் ஒரு கிக்கான பாடலையும் பாடியிருக்கிறார் பிரேம்ஜி. இப்போது பாடகராகவும் இல்லாமல் படங்களுக்கு இசையமைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

Next Story