நக்கலாக பேசி கமலிடம் திட்டு வாங்கினேன்!. நம்ம வாய் சும்மா இருக்காது!.. ராதாரவி சொல்றத பாருங்க!..
நடிகர் ராதாரவி கமலுடன் மிகவும் குறைவான படங்களிலேயெ நடித்திருக்கிறார். அதுவும் 80களில் மட்டுமே. கடந்த 30 வருடங்களுக்கும் மேல் கமலுடன் ராதாரவி நடிக்கவில்லை. கடைசியாக கமல் நடிப்பில் 1989ம் வருடம் வெளியான ‘வெற்றி விழா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ராதாரவி.
அதோடு சரி. அதன்பின் ராதாரவியை தனது படங்களில் கமல்ஹாசன் பயன்படுத்தவில்லை. அதற்கு காரணம் ராதாரவி பேசும் ஸ்டைல்தான் என்கிறார்கள் திரையுலகினர். எம்.ஆர்.ராதா மகன் என்கிற கர்வம் எப்போதும் ராதாரவிக்கு உண்டு. இதனால், படப்பிடிப்பில் கோபத்தை காட்டிவிடுவார்.
இதையும் படிங்க: அப்படி அவர் என்ன பண்ணாரு?!.. ராதாரவி ரிட்டயர்ட் ஆகுறது நல்லது!.. கிழித்தெடுத்த ஸ்ரீலேகா!..
இது பலருக்கும் பிடிக்காது. ரஜினி கூட ராதாரவியை மிகவும் கவனமாகவே கையாள்வார். கமலுடன் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் ரஜினியின் பல படங்களில் ராதாரவி நடித்திருக்கிறார். பெரும்பாலும் வில்லனாக நடித்திருப்பார். ரஜினியை விட ராதாரவி அதிகம் நடித்தது விஜயகாந்துடன்தான்.
அதற்கு காரணம் இருவரும் ‘வாடா போடா’ நண்பர்கள். கமலும் ராதாரவியும் வாடா போடா நண்பர்கள்தான். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்குமான நெருக்கம் குறைந்துவிட்டது. எம்.ஆர்.ராதா மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் நடிக்க துவங்கிய ராதாரவி துவக்கத்தில் 2 கன்னட படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..
அப்போது ‘நீ போய் பாலச்சந்தரை பார்’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் கமல்ஹாசன். ராதாரவியை பார்த்ததும் ‘அங்கே போய் அப்படி நில்லு.. நடந்து வா.. இந்த பக்கம் நடந்து வா’ என சொல்லி இருக்கிறார் பாலச்சந்தர். இது ராதாரவிக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ‘சார் நான் எம்.ஆர்.ராதாவின் மகன். எனக்கு நடிக்க தெரியும். என்னை அங்கே போய் நில். இப்படி நடந்து வா’ என்றெல்லாம் செய்ய சொல்லாதீர்கள்’ என சொல்ல அவரை அனுப்பிவிட்டார் பாலசந்தர்.
இதை பேட்டியில் சொன்ன ராதாரவி ‘நான் நடித்த 2 படங்களிலும் என்னை யாரும் அப்படி செய்ய சொல்லவில்லை. பாலச்சந்தர் அப்படி சொன்னதும் கோபப்பட்டு விட்டேன். அதன்பின் அதற்காக என்னை கமல் திட்டினார். அதனாலோ என்னவோ பாலச்சந்தர் படத்தில் நான் நடிக்கவே இல்லை’ என கூறியிருக்கிறார்.