latest news
Kanguva: சூர்யாவுக்கு சொந்தக்காரன் திருப்பூர் சுப்பிரமணியன்.. கங்குவா குறித்து ராதாரவி பளீச்
Kanguva: கங்குவா படம் சூர்யாவின் கெரியரிலேயே பெரிய டிஸாஸ்டர் படமாக மாறியிருக்கிறது. இந்தப் படத்திற்கு பின்னாடி சூர்யாவின் உழைப்பு எப்பேற்பட்டது என யாருமே புரிந்து கொள்ளவில்லை. இன்று வரை கங்குவா படம் அதிக ட்ரோலுக்கு ஆளாகி வருகிறது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யாவின் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆனால் இந்த அளவு ட்ரோல் மெட்டீரியலுக்கு படம் ஆளாகுமா என யாருமே எதிர்பார்க்கவில்லை. இதை சூர்யாவும் பணிவன்புடன் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சூர்யாவைப் பற்றியும் கங்குவா படம் பற்றியும் நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:விஜயும், பார்த்திபனும்தான் இந்த நிலைக்கு காரணமா? புலம்பும் தயாரிப்பாளர்…!
திருப்பூர் சுப்பிரமணியன் சூர்யாவுக்கு சொந்தக்காரர் என ஒரு பேட்டியில் ஒருவர் கூறியிருக்கிறார். அதனால் தான் கங்குவா படத்தை பற்றி திருப்பூர் சுப்ரமணியன் அந்த மாதிரி பேசி இருக்கிறார். ஆனால் அது அப்படி கிடையாது என ராதாரவி பேசி இருந்தார். கங்குவாவை பற்றி சொன்னால் ஜோதிகா சொன்னது தான் தவறு. முதல் அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை என அவர் சொன்னது தான் மிகப்பெரிய தவறு.
இப்போது 20 நிமிஷத்துக்கு அந்த படத்தில் வெட்டிட்டாங்க என நான் கேள்விப்பட்டேன் .30 நிமிடம் சரியில்லை என்று நாம் சொல்லக்கூடாது. நல்லா இருக்கோ இல்லையோ அந்த படம் எடுக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறார் சூர்யா. எல்லாவித உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடியவர்.
இதையும் படிங்க: எல்லா நடிகர்களும் செய்து ரஜினி மட்டும் செய்யாத ஒரே சம்பவம்… இத கேளுங்க!..
கார்த்தி கூட அப்படி கிடையாது. சூர்யா அவரது அப்பா சிவக்குமார் போல. சிவகுமாரும் இப்போது வரை காலையில் உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். கங்குவா ,பாகுபலி மாதிரி இல்லை என நீங்களா சொல்லாதீர்கள். ஏன் படக்குழு அந்த மாதிரி எதுவுமே சொல்லவில்லையே/. ஆனால் இது ஒரு சிறந்த படம். படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. தியேட்டரில் போய் தான் பார்க்க போகிறேன் .கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்ப்பேன் என ராதாரவி கூறி இருக்கிறார்.