More
Categories: Cinema News latest news

சந்திரமுகி பார்ட் 1 வேட்டையனிடம் ஆசி வாங்கிய சந்திரமுகி 2 வேட்டையன்!.. வைரலாகும் புகைப்படங்கள்!..

Chandramukhi2: தமிழ் சினிமாவில் ரஜினி ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களாக ரசிகர்களை இன்னும் அதே புத்துணர்ச்சியில் மிதக்க வைக்கிறார். சூப்பர் ஸ்டாராக வேறு எந்த நடிகர் வந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

அந்தளவுக்கு தன்னுடைய மாஸை அப்படியே தக்கவைத்துக் கொண்டு வருகிறார் ரஜினி. இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வரும் 28 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது சந்திரமுகி2.

Advertising
Advertising

rajini

இதையும் படிங்க: கேப் விடாம அடிச்சா எப்புடி… வாயவே திறக்கவிட கூடாது… வெங்கட் பிரபுவை லாக் செய்த தளபதி!

இந்தப் படத்தில் லாரன்ஸுடன் பிரபல பாலிவுட்  நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா போன்ற பல முன்னனி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகம் வெளியாகி ரஜினியின் கெரியரில் அந்தப் படம் ஒரு மைல் கல்லாக இருந்து வருகிறது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தில் ரஜினியை குருவாகவே பாவித்து வரும் லாரன்ஸ் நடித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: விஷால் கொளுத்தி போட்ட வெடி… ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா!..

இந்த நிலையில் இன்று தன் குருவிடம் ஆசி பெறுவதற்காக லாரன்ஸ் ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார். வழக்கம் போல ரஜினியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய லாரன்ஸை தன் மார்போடு அணைந்து கொண்ட ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றது.

rajini

இந்த நிகழ்வை பார்க்கும் போது உண்மையில் அந்த ராகவேந்திரரே வந்து ஆசி வழங்கியதை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஷங்கருக்கே நோ சொன்ன சித்தார்த்… டாப் இயக்குனர் சொன்ன ஐடியாவால் தடம் புரண்ட சினிமா வாழ்க்கை!

இதோ அந்த வீடியோ : https://x.com/offl_Lawrence/status/1706530029075870202?s=20

Published by
Rohini

Recent Posts