Cinema History
என் வாழ்க்கையை மாத்தினதே அவர்தான்!. மறக்க மாட்டேன்!. ரஜினி பற்றி நெகிழும் சத்தியராஜ்…
ஒருவரது வாழ்வில் சரியான நேரத்தில் சரியான நபர் சொல்லும் சரியான அறிவுரை அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும். பலரின் வாழ்விலும் இது நடக்கும். சிலருக்கு அது நடக்காமல் தடம் புரண்டு ஆசைப்பட்ட வாழ்க்கை இல்லாமல் வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்கள்.
சினிமா உலகில் சரியான நேரத்தில் அறிவுரை என்பது பொக்கிஷம் போல, ஏனெனில், சினிமா உலகம் போட்டி பொறாமைகளால் நிறைந்தது. ஒருவரின் இடத்தை தட்டி பறிக்கவே பலரும் காத்திருப்பார்கள். சினிமா உலகில் தூங்கும் போதும் காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும். இல்லையேல் மலர் வளையம் வைத்து விடுவார்கள்.
இதையும் படிங்க: நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..
வளரும் நடிகருக்கு யாரும் உதவ மாட்டார்கள். சரியான அறிவுரையை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் எங்கே தனக்கே போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயம்தான். தன்னுடைய இடத்தை தக்க வைப்பதிலேயே எல்லோரும் குறியாக இருப்பார்கள். ஆனால், இதில் ரஜினி போன்ற சில நடிகர்கள் மட்டுமே விதிவிலக்கு.
நடிகர் சத்தியராஜ் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த போது ரஜினிகாந்த் பெரிய ஸ்டாராக இருந்தார். ரஜினி நடிப்பில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல படங்களிலும் சின்ன சின்ன வேஷங்களில் சத்தியராஜ் நடித்திருக்கிறார். ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேசிய சத்தியராஜ் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…
மூன்று முகம் படத்தில் நடித்தபோது என்னிடம் பேசிய ரஜினி ‘உங்களுக்கு தனித்துவமான ஒரு முக அமைப்பு இருக்கிறது. எனவே, மத்தவங்க மாதிரி நடிக்காம வித்தியாசம எதாவது ட்ரை பண்ணுங்க’ என சொல்லி இருக்கிறார். அதற்கு சத்தியராஜ் ‘இயக்குனர் என்ன சொல்றாரோ அப்படித்தான நடிக்க முடியும்’ என சொல்லி இருக்கிறார்.
அதற்கு ரஜினி ‘இயக்குனர் சொல்வதை கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், நடிக்கும்போது உங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்படி நடியுங்கள். இருட்டில் 30 பேர் கை தட்டிவிட்டால் அந்த காட்சியை இயக்குனர் நீக்கமாட்டார்’ என ஐடியா சொன்னார்.
அதையே நானும் பின்பற்றினேன். அது எனக்கென ஒரு ஸ்டைலையும் கொண்டுவந்தது. அதோடு, மணிவண்னன் போன்ற இயக்குனர்களும் என்னை வித்தியாசமாக நடிக்க வைத்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர்’ என சொல்லி இருக்கிறார். அதேநேரம், இதே சத்தியராஜ் பல சூழ்நிலைகளில் ரஜினியை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க்து.