நின்னு போன படம்! ரஜினி கேமியோ ரோலில் நடித்து 100 நாளை தாண்டி ஓடிய சம்பவம்

rajini
Actor Rajini: தமிழ் சினிமாவில் அன்றும் என்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 40 வருடங்களை தாண்டி மக்கள் மத்தியில் ஒரு பெரிய அந்தஸ்தை பெற்று இந்திய அளவில் பெயரும் புகழும் அடைந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். 73 வயதை கடந்தாலும் இன்னும் அவருக்கு உண்டான அந்த மாஸ் ஸ்டைல் குறையவே இல்லை.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராகவே திகழ்ந்து வருகிறார். எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் வசூலில் ரஜினியின் படங்கள் தான் பின்னி பிடல் எடுத்து வருகின்றன. ஹீரோவாக ஒரு பக்கம் ரஜினி கோலோச்சி வந்தாலும் அவர் ஆரம்ப காலங்களில் கேமியோ ரோலில் நடித்த ஒரு சில படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இதையும் படிங்க:அந்த குரல் என் குரல் அல்ல!.. பயில்வான் ரங்கநாதனால் பதறிப்போன சுசித்ராவின் எக்ஸ் கணவர்!..
அந்த வகையில் அவர் கேமியோ ரோலில் நடித்த ஒரு படத்தை பற்றிய செய்திதான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுவும் பாதியிலேயே நின்று போன படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்த பிறகு அந்தப் படம் ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அது 1990 ஆம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பிள்ளை திரைப்படம். அர்ஜுன், கனகா ஆகியோர் லீடு ரோலில் நடிக்க இந்த படத்தை செந்தில்நாதன் இயக்கியிருந்தார். படம் பாதியிலேயே நின்று போக டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்கள் என்ன பிரச்சனை என கேட்டிருக்கின்றனர். அப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரம் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்போம் என பட குழு சொல்லி இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினி பாட்டுக்கு டியூன் கேட்டா ராம்கி பட டியூனை கொடுத்த இளையராஜா! அப்புறம் என்னாச்சு தெரியுமா?
அதன் பிறகு ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்தால் படத்திற்கு உயிர் வந்த மாதிரி இருக்கும். அதனால் ரஜினியிடம் பேசிப் பாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு ரஜினியிடம் போய் பேச அவரும் சம்மதித்திருக்கிறார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி டிராக்கில் ரஜினியின் காட்சி இடம்பெறுவது மாதிரி படமாக்கப்பட்டிருக்கும்.’
அதாவது ரஜினியை வைத்து படம் எடுக்கப் போவதாக கவுண்டமணியும் செந்திலும் ரஜினியை தேடி அவர் வீட்டுக்கு வருவதும் அப்போது ரஜினி அவர்களிடம் உரையாடுவதும் மாதிரியான அந்த காட்சி இடம் பெற்று இருக்கும் .ஒரு மணி நேரம் மட்டுமே நடித்துக் கொடுத்த ரஜினியின் இந்த காட்சி அந்த படத்திற்கே உயிர் கொடுத்த மாதிரி அமைந்துவிட்டது. அதனால்யே இந்த படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா பாருங்க!… லாங் கவுனில் மொத்த அழகையும் காட்டும் ஷிவானி…